உதடு கருமையை பத்தே நிமிடத்தில் போக்க எளிய வழிகள்!

0
1814

உதடுகளை அழகாக காட்ட லிப்ஸ்டிக் , லிப்பாம் போன்றவற்றை உபயோகப்படுத்துவதால் உதடுகள் மென்மையின்றி தோலுரிந்து, கருப்பாக மாறும்.

மேலும் நீண்ட நாட்களாக சிகரெட் பிடிப்பதால் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் எனும் அல்கலாய்டு , உதடுகளை கருமையாக்குகின்றன. எனவே உதடுகளில் உள்ள கருமையைப் போக்கி, உதடுகளை அழகாக வைத்துக் கொள்வது எப்படி என பாா்ப்போம்.

டிப்ஸ் #1
ஸ்கரப் செய்ய தேவையான பொருட்கள்:

எலுமிச்சை  – 1
சர்க்கரை – சிறிது
தயாரிக்கும் முறை:

எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் பூசி மென்மையாக ஸ்கரப் செய்து, 5-10 நிமிடம் வரை ஊற வைத்து,  குளிர்ந்த நீரில் கழுவிவிடுங்கள்.

இதனை தினமும் இரவில் நித்திரைக்கு முன் செய்து வந்தால், 5-6 நாட்களில் உதடுகளில் உள்ள கருமை நீங்கியுள்ளதைக் காணலாம்.

டிப்ஸ் #2

கற்றாழையின் ஜெல்லை இரவில் நித்திரைக்கு முன் உதடுகளில் பூசி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி, உதடுகள் அழகாக மாறும்.

டிப்ஸ் #3

பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி 2 நிமிடங்கள் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் உதடுகளில் உள்ள கருமை அகலும்.

டிப்ஸ் #4

தேன், உதட்டில் உள்ள கருமையை போக்க உதவும், அது போல் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை உதட்டில் பூசி வந்தால் கருமை நீங்கும்.

இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: