உண்மையை புலப்படுத்திய நிபுணர்! இலங்கை ரூபாயின் தொடர் வீழ்ச்சிக்கான காரணம்?

0

அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதற்கான காரணத்தை துறைசார் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை சமகால அரசாங்கம் எடுக்கவில்லை. இதன் காரணமாக தொடர் வீழ்ச்சியை ரூபாய் சந்திப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கல்வி பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 174.12 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ரூபாய் வீழ்ச்சியை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய கொள்கையை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய நாடுகள் தங்கள் பணத்தை பாதுகாப்பதற்கு செயற்படுத்தியுள்ள கொள்கையை ஒப்பிடும் போது, இலங்கை அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளுக்கு தலையிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இலங்கை ரூபாய் ஒன்று வீழ்ச்சியடைவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடு தான் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி 200 ரூபாவை எட்டும் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்! நள்ளிரவில் நேர்ந்த விபத்து!
Next articleமாணவர்கள் சிலரை பாடசாலை நேரத்தில்! துஸ்பிரயோகம் செய்த அதிபர்!