உணவுப் பொருட்களை ஏன் பொலித்தீனில் சுற்றக் கூடாது என்று தெரியுமா?

0
334

நீங்கள் உங்கள் இரவு ஊட்டலுக்காக மீனை பேக்கிங் பண்ணும் போதோ, காய் கறிகளை வறுக்கும் போதோ, அல்லது துண்டு இறைச்சியை தயார் செய்யும் போதோ பொலித்தீனில் கட்டி வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

ஆனால் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அப்பொலித்தீனிலுள்ள சில வகை சேர்வைகள் உங்கள் உணவுப் பதார்த்தத்தினுள் ஊடுருவக் கூடும் என்பது. இது உங்கள் உடல் நலத்திற்கு தீங்காக கூட இருக்கலாம்.

உணவுத் தயாரிப்பில் அலுமினியத்தின் பயன்பாடு தொடர்பில் ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டிருந்தது.

அலுமினியமானது தனியே சுற்றும் படலங்களில் மட்டும் இருப்பதில்லை. பெரும்பாலான சமையல் பாத்திரங்கள், மற்றும் உணவு பரிமாறும் கரண்டிகள் போன்ற சமையல் சாதனங்கள் அலுமினியத்தால் ஆனவை.

முன்பு இதற்காக செப்பாலான பாத்திரங்களே பயன்படுத்தப்பட்டன. பின்னர் விலை குறைவென்பதாலும், சுத்தப்படுத்துவது சுலபம் என்பதாலும் அத்தனையும் அலுமினியத்தால் பிரதியீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அலுமினியப் பாத்திரங்களில் உணவு தயாரிப்பதால் பாதிப்புக்கள் எதுவுமில்லை, தயாரிக்கப்பட்ட உணவு அலுமினியப் படலத்தில் சுற்றப்பட்டு சூட்டடுப்பில் வைக்கும் போது தான் பிரச்சனைக்குரியதாகின்றது.

மனித உடலானது குறித்தளவு அலுமினியத்தை வினைத்திறனாக பிரித்தெடுக்கக் கூடியது. இதன் கருத்து, சிறிதளவு அலுமினியத்தை உள்ளெடுப்பதால் மனித உடலுக்கு தீங்கேதும் ஏற்படப்போவதில்லை.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப் படி ஒருநாளைக்கு 1 kg நிறையுடைய மனிதன் 40 mg அலுமினியத்தை உட்கொள்ளலாம். இதன்படி 60 kg நிறையுடைய ஒருவரால் 2400 mg வரையில் உள்ளெடுக்க முடியும்.

ஆனால் பெரும்பாலானவர்கள் இவ் அளவிலும் அதிகமாக உட்கொள்கின்றனர். அலுமினியமானது சோளம், மஞ்சள் பாற்கட்டி, உப்பு, மூலிகைகள், நறுமணப்பொருட்கள் மற்றும் தேயிலை என்பவற்றில் இயற்கையாகவே அடங்கியுள்ளது. சமையல் பாத்திரங்களில் உள்ளது, மருந்தியல் பொருட்களில் உள்ளது.

அலுமினியத்திலிருந்து பெறப்படும் அலுமினியம் சல்பேற்றானது குடிநீர் சுத்திகரிப்பின் போது வீழ்படிவாக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

விஞ்ஞானிகள் அதிக அலுமினியம் உட்கொள்ளலால் மனிதனில் நச்சு உண்டாகலாம் என வெளிப்படுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு Alzheimer நோயுள்ள ஒருவன் மூளையில் அதிக செறிவில் அலுமினியம் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வயதான சமுதாயமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விவேலே மேற்படி நோய் நிலைமை அவதானிக்கப்பட்டது. இப் புதுவித நோய் அதிக அலுமினிய உட்கொள்ளலாலேயே ஏற்படுகிறது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் என்பு நோயுள்ளவர்களில் இவ் அலுமினியத்தின் தாக்கம் பெரிதளவில் இருக்குமெனவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: