உணவுப்பஞ்சத்தால் அல்லாடும் நாடு! ஒரு கிலோ வாழைப்பழம் 8000 ரூபாவாம்! எந்த நாட்டில் இந்த விலை தெரியுமா!

0

உணவுப்பஞ்சத்தால் அல்லாடும் நாடு! ஒரு கிலோ வாழைப்பழம் 8000 ரூபாவாம்! எந்த நாட்டில் இந்த விலை தெரியுமா!

வடகொரியாவில் உணவு பஞ்சம் தட்டுப்பாட்டால் ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3000க்கு விற்கப்படுகிறது. இது இலங்கை மதிப்பில் 8000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா காலம் என்பதால் பல்வேறு உலக நாடுகள் பொருளாதாரத்தில் பயங்கர வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அந்த வரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பது வடகொரியா.

banana

இந்த நாட்டை அதிபர் கிம் ஜாங் கடந்த 7 வருடமாய் ஆட்சி செய்து வருகிறார். தனது மக்களை கொடுமைப்படுத்துவர். தனக்கு பிடிக்காதவர்கள் கொலை செய்து விடுவார் என்று பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருபவர் கிம் ஜாங்.

இந்நிலையில் தனது நாட்டில் 1994ஆம் ஆண்டு ஏற்பட்ட உணவு பஞ்சம் போல இந்த முறையும் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார். கொரோனாவை தொடர்ந்து அங்கு ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கால் பயிர்கள் முழுவதும் சேதம் அடைந்தன.

இதனால் அந்நாட்டில் உணவு பஞ்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஒரு கிலோ வாழைப்பழம் 45 டாலர், 32 யூரோவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய மதிப்பில் ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3500 ஆகும். இவர் சமீபத்தில் ஒரு உத்தரவை வெளியிட்டார். அதில், 2025ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உணவு பற்றாக்குறையால் அங்கு வசிக்கும் மக்கள் பட்டினியாக இருக்க வேண்டிய மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாளை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கும் சுக்கிர பகவான் இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் அள்ளிக்கொடுக்கப்போகிறாராம்! அதில உங்க ராசி இருக்கா!
Next articleஇன்றைய ராசி பலன் 30.10.2021 Today Rasi Palan 30-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!