உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு தங்க சவப்பெட்டியில் வைக்கப்பட்ட மில்லியனரின் உடல்!

0
831

கரீபியன் நாட்டில் இறந்துபோன மில்லியனரின் உடலை இறுதி அஞ்சலியின் போது தங்கத்தால் அலங்கரித்து சவப்பெட்டிக்குள் வைத்துள்ளனர்.

Trinidad தீவில் வசித்து வந்த Sheron Sukhedo (33), கார் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை செய்துவரும் பிரபல மில்லியனாவார்.

தொழில்முறை ரீதியாக இவருக்கு எதிரிகள் இருந்த காரணத்தால், தனி பொலிஸ் பாதுகாப்பு இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்மநபர்களால் ஷெரான் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

மில்லியனராக இருந்த இவருக்கு தங்கத்தின் மீது அதிக ஆர்வம். அதனால் வாழ்ந்தபோது எப்படி இருந்தாரோ, அதே போன்றே இறந்தபின்னரும் இருக்க வேண்டும் என அவரது உடல் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டது.

$50,000 மதிப்பிலான தங்க சவப்பெட்டியில் இவரது உடல் வைக்கப்பட்டிருந்தது, மேலும் $100,000 மதிப்பிலான தங்க நகைகளை உடல் முழுவதும் அணிவித்து, தங்கத்தால் செய்யப்பட்ட ஷீ என உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, தங்கத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டார்.

இது இறுதி ஊர்வலத்தின் போது மட்டுமே, பின்னர் இவரது உடல் அடக்கம் செய்யப்படும்போது இவை அனைத்தும் கழற்றி எடுக்கப்பட்டுவிட்டன.

இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது மரணம் குறித்த விசாரணையை பொலிசார் நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏனைய செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: