ஆண்கள் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா! ஆண்களை அதிகளவில்..

0
6502

ஆண்கள் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமாக உள்ளதனால் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சம்பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், வெறும் வயிற்றில் தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஆண்களை அதிகளவில் தாக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சினை மற்றும் இதர பிரச்சனைகளைத் தடுக்கலாம். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும்.

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வரும் போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவடையும்.

ஊட்டச்சத்துக்கள்

பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவாகவும், வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றனவும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றனவும்; வளமாக நிறைந்துள்ளன.

பக்கவாதம் தடுக்கப்படும்

பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதனால், அதனை ஆண்கள் தினமும் உட்கொண்டு வரும் போது, அவர்களை பக்கவாதம் தாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் குறைந்தளவாக உள்ளதாக பல்வேறுபட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செரிமானம் சீராகும்

கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் நிறைந்த பேரிச்சம் பழத்தினை தினமும் உட்கொண்டு வரும் போது செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமடைந்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது.

ஆரோக்கியமான நரம்பு மண்டலம்

குறைந்தளவான சோடியம்; மற்றும் அதிகளவான பொட்டாசியம் கொண்ட பேரிச்சம் பழத்தினை உட்கொள்ளும் போது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

சிறந்த ஆற்றல் கிடைக்கும்

பேரிச்சம் பழத்தில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளதனால் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வரும் போது உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, ஆற்றல் மேம்படும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்! முடி சீக்கிரத்திலே வளரும்!
Next articleஅக்குள் பகுதி ரொம்ப கருப்பாக இருக்குதா? கவலை வேண்டாம் எலுமிச்சையுடன் இதை சேர்த்து அக்குளில் தடவுங்கள்!