உடல் எடை வேகமாக குறைய சுடுநீரில் ஊற வைத்த ஆளி விதை, குடித்தால் கிடைக்கும் இதர நன்மைகள்!

0
2865

மாக குறைய சுடுநீரில் ஊற வைத்த ஆளி விதை, குடித்தால் கிடைக்கும் இதர நன்மைகள்.

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் வருத்தப்பட்டு புலம்பும் ஓர் பிரச்சனை தான் உடல் பருமன். தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும் உடல் எடை அதிகரிப்பதோடு, ஆங்காங்கு கொழுப்புக்கள் தேங்கி தொங்க ஆரம்பிக்கின்றன.நம்மில் பெரும்பாலானோர் நன்கு வாய்க்கு ருசியாகவும், வயிறு நிறைய உணவு உட்கொண்டும் பழகியிருப்போம். அத்தகையவர்கள் தங்கள் வாயை அடக்கி, கடுமையான டயட் மேற்கொண்டு உடல் எடையைக் குறைப்பது என்பது சற்று கடினம் தான்.

ஆனால் கடுமையான டயட்டின் மூலம் மட்டும் தான் உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதில்லை. ஸ்மார்ட்டான சில எளிய வழியின் மூலமும் உடல் எடையைக் குறைக்கலாம். குறிப்பாக நமக்கு எளிதில் கிடைக்கும் ஒரு அற்புத பொருளைக் கொண்டு உடல் எடையைக் குறைக்க முடியும்.

அது என்ன பொருள் என்பதையும், அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதையும், அவற்றால் கிடைக்கும் இதர நன்மைகள் என்னவென்பதையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆளி விதை
விதைகளில் அதிக ஊட்டச்சத்துக்களை தன்னுள் அடக்கிய ஓர் அற்புத விதை தான் ஆளி விதை. பார்ப்பதற்கு கொள்ளு போன்று காணப்படும். தற்போது இந்த ஆளி விதை அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைப்பதால், அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் ஒரு பொருளாக இது உள்ளது.

ஊட்டச்சத்துக்கள்
ஆளி விதைகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஃபேட்டி அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற மனித உடலின் சீரான இயக்கத்திற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளன. எடையைக் குறைக்க இந்த ஆளி விதையை எப்படி உட்கொள்வது என்று காண்போம்.

தயாரிக்கும் முறை:
3 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை ஒரு பாத்திரத்தில் போட்டு, பின் அதில் 1 லிட்டர் கொதிக்கும் சுடுநீரை சேர்த்து மூடி, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் உட்கொள்ள வேண்டும்.

உட்கொள்ளும் முறை:
தயாரித்த ஆளி விதை கலவையை ஒவ்வொரு வேளை உணவு உண்பதற்கு முன்பும் சாப்பிட வேண்டும். இவ்வாறு 10 நாட்கள் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும். பின் 10 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் 10 நாட்கள் இந்த செயலை பின்பற்ற வேண்டும். இதனால் உடல் எடை குறைவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது இந்த ஆளி விதையால் கிடைக்கும் இதர நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1
ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இந்த கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் இது பக்கவாதம் வரும் அபாயத்தையும் குறைக்கும்.

நன்மை #2
ஆளி விதையில் உள்ள லிக்னன் எனப்படும் ஊட்டச்சத்து குழுவில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஈஸ்ட்ரோஜென் பண்புகள் உள்ளன. இது மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

நன்மை #3
ஆளி விதையில் நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இதை அன்றாட டயட்டில் சேர்க்கும் போது, குடலியக்கம் சீராகி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

நன்மை #4
அதிகளவு நார்ச்சத்துள்ள ஆளிவிதை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் மற்றும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

நன்மை #5
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆளி விதை மிகவும் நல்லது. இந்த விதையை ஒருவர் தினமும் உணவில் சேர்த்து வர, இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

நன்மை #6
ஆளி விதையில் தாவர வகை புரோட்டீன் அதிக அளவில் உள்ளது. அசைவ உணவை உண்ணாமல் இருப்பவர்களுக்கு, இந்த ஆளி விதை சிறந்த புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருளாக விளங்கும்.

நன்மை #7
ஆளி விதையில் உள்ள கரையாத நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் ஆளி விதையை டயட்டில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

நன்மை #8
ஆளி விதை நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பி வைத்திருப்பதால், பசி கட்டுப்பட்டு, கண்டதை சாப்பிட்டு உடல் பருமனடைவது தடுக்கப்படும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுநீரக சேதத்தை விளைவிக்கும் சில உணவுப் பழக்கங்கள்!
Next articleகைகளில் உள்ள கருமையைப் போக்கி, வெண்ணிற தோற்றத்தை பெற இயற்கை வழிகள்.