அடிவயிற்று தொப்பை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா! சூடு தண்ணியில் இதை கலந்து குடித்து பாருங்கள்!

0
58923

உடல் எடையை குறைக்க பல வகையான மருந்துகளையும், உடற்பயிற்சிகளையும் செய்து பார்த்து சோர்வடைந்து விட்டீர்களா! கவலை வேண்டாம்! இது போன்ற நிலையை முற்றிலுமாக தவிர்க்கவே ஆயர்வேதம் இருக்கிறது. அதிலும் நாம் சொல்லும் ஒரு சில முக்கிய பானங்களை தொடர்ந்து குடித்து வந்தாலே போதும். உடல் பருமனை இலகுவாக குறைக்கலாம்.

இன்றைய காலத்தில் பெரியவர்கள் மட்டுமன்றி இளைய தலைமுறையினர் வரை அவர்களின் எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி வேண்டியதில்லை. இதை பெரிய குறையாக கருதுபவர்கள் பலர்.

உடல் எடையை குறைக்க உதவும் ஆயர்வேத முறையில் இந்த பானம் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. முதலில் 1 ஸ்பூன் காபியை வெந்நீரில் கலந்து அதனுடன் 1 ஸ்பூன் ஆளி விதை மற்றும் டார்க் சோகோலட் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் வடிகட்டி பருகவும். இந்த காபியை தினமும் காலையில் தவறாமல் குடித்து வர‌ ஒரே மாதத்தில் உடல் எடையை குறைவது உறுதி.

மேலும், இது அடி வயிற்றில் கொழுப்புகள் சேராமல் பார்த்து கொள்ளவும் உடல் எடையை குறைக்கவும் மாதுளை மற்றும் கிரேப்புரூட் ஆகியவற்றை ந‌ன்றாக சேர்த்து அரைத்து கொண்ட பின் அதனை வடிகட்டி அச் சாற்றுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடித்து வர தொப்பை இருந்த இடம் தெரியாமல் மறைவது நிச்சயம். தொப்பையை குறைக்க உதவும் பானங்களில் இது மிக சிறந்தது.

அடுத்து, வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும். இரவு முழுவதும் வெந்தயத்தை 1/2 கப் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்த பின்னர் வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து குடித்து வர இந்த ஆயுர்வேத பானம் அற்புதமான தீர்வை பெற்று தரும்.

அடுத்து, பப்பாளியை நன்றாக அரைத்து வடிகட்டிய பின்னர் உப்பு மற்றும் இலவங்க பொடியை சேர்த்து நன்கு கலந்து தொடர்ந்து குடித்து வருவதால் உடல் எடை எளிதாக குறைத்து விட முடியும்.

அடுத்து, அண்ணாச்சி பழத்தை நன்கு அரைத்து இளநீர், கருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் அரைத்து வடிகட்டி இறுதியாக சிறிது உப்பை சேர்த்து தொடர்ந்து குடித்து வர உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கி உடல் பருமன் குறைந்து விடும்.

அடுத்து, கோதுமை புல்லை நன்றாக நறுக்கி அரைத்து கொள்ளவும். பின்பு திராட்சை சேர்த்து மீண்டும் அரைத்து கொண்ட பின், வடிகட்டி தேவைக்கு ஏற்ப‌ சிறிது நீரும் சேர்த்து கொள்ளவும். இறுதியாக உப்பை சேர்த்து பருக‌லாம். இதன் மூலம் கொழுப்பு, மற்றும் கெட்ட கொலஸ்ட்ரோலை முற்றிலுமாக கரைத்து உடல் எடையை குறைத்துக் கொள்ள முடியும்.

இறுதியாக, நன்றாக கொதித்த நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து வர அற்புதமான தீர்வை நமக்கு தரும். மேலும், உடலில் உள்ள கொழுப்புகளையும் முற்றிலுமாக கரைக்க கூடிய ஆற்றல் பெற்றது.

முயற்சித்து பாருங்கள்! சிறந்த பலனை உணருவீர்கள்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: