ஆண்கள் 60 வயதிலும் முழு இன்பம் காண உதவும் இந்த மூலிகை பற்றி தெரியுமா?

0
13610

நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே நினைப்போம். குறிப்பாக ஆண்களுக்கு தினசரி வாழ்க்கையில் நிறைய மன அழுத்தம் இருக்கும். எனவே உங்களது உடல்நலத்தை சரியாக பேணிக்காக்க நீங்கள் தினசரி உடற்பயிற்சி, முறையான உணவுகள், நல்ல நிம்மதியான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். இவை தான் உங்களது உடல்நலத்தை தீர்மானிக்கின்றன.

ஆண்களின் முக்கிய உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது தான் ஜின்செங். இது அதிக மருத்துவநலன்களை கொண்டுள்ளது. இது ஒருவகையான வேராகும். இதன் மருத்துவ குணங்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

சீன தாவரம்

சீனாவின் தாவர மருந்துகளில் மிகப்பிரபலமானது ஜின்செங். இது வடகிழக்கு, சீனா, கிழக்கு ரஷியா, வடகொரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த்து. 7000 ஆயிரம் ஆண்டுகளாக இதனுடைய மருத்துவப் பயன்கள் தொடர்ந்து உணரப்பட்டுள்ளது. இதனை அரேபியர்கள் 9- ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். இருப்பினும் கி.பி 18-ம் நூற்றாண்டுக்குப்பிறகே ஜின்செங் பிரபலம் அடைந்தது. இத்தாவரத்தின் வேர் மருத்துவப்பயன் கொண்டவை. பயிரிடப்பட்ட தாவரங்களில் இருந்தே வேர்கள் பெறப்படுகின்றன. பயிரிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்தே வேர்கள் பலன் தரத் தொடங்கும். இலையுதிர்காலத்தில் சேகரிக்கப்படும் வேர்கள் ஆவியில் வேகவைத்து உலர்த்தப்படும்.

ஆய்வுகள்

இத்தாவரத்தில் பலவிதமான வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜின்செங் வேரில் 3 சதவிகிதம் ஜின்செனாய்டுகள் உள்ளன. இவை 25 வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இவை டிடெர்பினாய்டு சப்போனின்களாகும். இவற்றுடன் அசிட்டிலைன், கூட்டுப்பொருட்கள், செஸ்கியூடெர்பின்கள்,பெனாக்சன்கள், உள்ளன.

மன இறுக்கம்

பசியினால் ஏற்படும் களைப்பு வெப்ப நிலைகளில் உயர்-குறை மட்டங்கள், மற்றும் மனம், உணர்வு இறுக்கங்களை தாங்க உடலினை ஏற்றதாகச் செய்யும். இவை மட்டுமின்றி தூக்கத்தை தூண்டி நன்றாக உறக்கம் வரச்செய்யும். நம் உடலில் இயல்பாக உள்ள ஹார்மோன்கள் போன்ற அமைப்புடைய ஜின்செனாய்டுகள் இதற்கு அடிப்படையாக உள்ளன. ஜின்ஜெங் நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்தி கல்லீரல் செயல்பாட்டினை கூட்டுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வயோதிகத்தால் ஏற்பட்ட பலவீனம் போக்கவல்லது.

ஓட்டப்பந்தய வீரர்களுக்கு

சீனாவில் ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு வலுவேற்றியாகவும், ஊக்குவியாகவும் ஜின்செங் பயன்படுகிறது. உடல்சார்ந்த இறுக்கத்தினைப் போக்க வல்லது. ஆண்களுக்கு பால் உணர்வு ஊக்குவியாகவும், பயன்படுத்தப்படுகிறது. வடக்கு மற்றும் மைய சீனாவில் உள்ள மத்திய வயதினர்கள் இதனை வலுவேற்றியாக உட்கொள்கின்றனர். குளிரை தாங்க உதவுகிறது. மேலை நாடுகளில் வலுவேற்றியாகவும், மன இறுக்கங்களைத் தாங்கவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

விறைப்பு தன்மை

ஜிஞ்செங் வேரானது, ஆண்களுக்கு உண்டாகும் விறைப்பு தன்மை பிரச்சனையை சரியாக்க உதவுகிறது. பொதுவாக ஆண்களுக்கு அவர்களது 40 வயதில் 5% விரைப்பு தன்மை குறைய ஆரம்பிக்கிறது, அதன் பின்னர் ஒரு ஆண் 70 வயதை அடையும் போது விரைப்பு தன்மையின் அளவு 15 சதவீதம் வரை குறைந்து விடுகிறது.

ஆனால் இந்த ஜின்செங்கை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு உடலில் ஹார்மோன் மற்றும் இரத்த அழுத்த அளவை அதிகரிக்காமலேயே உடலுறவில் ஈடுபடும் திறனை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குளூக்கோஸ் அளவை அதிகரிக்க

ஆண்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வர அதிகமான காரணங்கள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவினை குறைப்பதன் மூலமாக இந்த பிரச்சனையை தீர்க்கிறது. ஆண்களுக்கு விரைப்பு தன்மை குறைவாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று தான் சர்க்கரை நோய். இந்த ஜின்செங் மூலிகையானது ஆண்களின் விரைப்பு தன்மை மற்றும் சர்க்கரை நோய் இரண்டையும் ஒன்றாக தீர்த்து வைக்க உதவுகிறது.

குறிப்பு

எப்போதும் ஜின்செங் வேரை தனியாக உட்க்கொள்ள கூடாது. இதனை உணவுடன் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். இதனால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சர்க்கரையின் அளவை மிகவும் அதிகமாக குறைத்து விடக் கூடிய வாய்ப்பு உண்டாகும். மேலும் இது மருந்தின் வேலைக்கு இடையூறு செய்யும். எனவே நீங்கள் மாத்திரை மருந்துகளை சர்க்கரை நோய்க்காக எடுத்துக் கொண்டு வந்தால், அதனுடன் சேர்த்து இந்த வேரை சாப்பிட கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேன்சர்

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பலர் கேன்சர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஜின்செங்கில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உங்களது உடலில் உள்ள செல்களை பாதுக்காக்கிறது. மேலும் இது மன அழுத்தத்தை தரக் கூடிய செல்களையும் தடுத்து கேன்சர் நோய் வராமல் உங்களை பாதுகாக்கிறது.

உடல் எடை

உடல் எடை தான் நமது உடலில் பல்வேறு நோய்கள் வர முக்கிய காரணமாக உள்ளது. இருதய நோய்கள், வாதம், சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு உடல் எடை அதிகமாக இருப்பது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. ஜின்செங் ஆனாது உடலில் உள்ள ஹார்மோன்கள், மெட்டபாலிசம் போன்றவற்றை சரியாக இயங்க வைப்பதன் மூலமாக உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நியாபக சக்தி

ஆண்களின் மெனோபாஸ் நேரத்தின் போது அவர்களுக்கு உடலில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. அதில் ஒன்று தான் இந்த நியாபக மறதியாகும். அதுவும் சர்க்கரை நோய் இருந்தால், இந்த சமயத்தில் நியாபக மறதி உண்டாகும்.

ஆனால் அதிஷ்டவசமாக, இந்த சமயத்தில் வரும் நியாபக மறதியை வெல்ல உள்ள அபூர்வ மூலிகை தான் இந்த ஜிஞ்செங் ஆகும். மேலும் இது வயது முதிர்வால் வரும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளவும் உதவுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: