உடலை வீங்கச்செய்கின்ற கெட்ட சிறுநீரை வெளிவேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும் அற்புத கீரை!

0
2019

இலச்சை கெட்ட மரம் என்றழைக்கப்படும் சண்டிக் கீரை மரம், பெரிய இலைகளைக் கொண்ட ஒரு அரிய வகை மரமாகும். இந்தியாவின் தீவுகளான அந்தமான் கடற்கரையை ஒட்டிய காடுகளில் அதிக அளவில் காணப்படும் இந்த சண்டிக் கீரை மரங்கள், தற்காலத்தில், வீடுகளில், இதன் மருத்துவ பயங்களுக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது.

அதிக உயரமாக வளராமல் சற்று வளைந்து வளரும் தன்மை கொண்ட இந்த மரங்களின் இலைகள் அகலமாக, காணப்படும். இந்த மரத்தின் பட்டைகள் வெண்ணிறத்தில் காணப்படும். அரிதாக பூக்கும் சண்டிக் கீரை மரத்தின் மருத்துவ பலன்களை, இதன் இலைகளே, தருகின்றன.

சண்டிக் கீரை எனும் இலச்சை கெட்ட மரத்தின் இலைகளில், வைட்டமின் சத்துக்களும், தையாமின் போன்ற தாதுக்களும் மிகுந்து காணப்படுகின்றன.

பெரியவர்கள் முதல் பெண்மணிகள் சிறுவர் வரை, அனைவரும் சூழ்நிலைகளின் காரணமாக, சரியான வசதிகள் இன்மையாலும் சிறுநீரை அடக்கும் நிலைமை ஏற்படும், அதனால், சிறுநீர்ப்பையில் வெளியேற வழியின்றி தேங்கும் சிறுநீரே, உடலில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கிவிடுகின்றன.

சிறு நீரக பாதிப்புகள் நீங்கிட :
சிறுநீர்ப் பையில் தேங்கும் சிறுநீர், சமயத்தில் உடலில் கலந்து, அசுத்த நீராக மாறி, உடலை வீங்கச்செய்கிறது. சிலருக்கு கால்களில் வீக்கம் மற்றும் முகத்தில் வீக்கம் இதனாலேயே, உண்டாகும். சிலருக்கு இதன் காரணமாகவே, சிறுநீர்ப் பையில் கற்கள் ஏற்படுகின்றன.

இந்த நிலையே நாளடைவில், இரத்தத்தில் அசுத்த உப்புகளாக மாறி, பல்வேறு வியாதிகள் வருவதற்கு காரணமாக அமைகின்றன. சிலருக்கு நாள்பட்ட வீக்கங்கள் கற்கள் போல இறுகி, உடல் பருமனை அதிகரித்து, நடப்பதற்கும், உட்காருவதற்கும் சிரமங்கள் தரும் வகையில் அமைகின்றன.

ரத்த அழுத்தம் சமன் :
இப்படி சிறுநீரக பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, உற்ற நிவாரணமாக, சண்டிக் கீரைகள் திகழ்கின்றன. சண்டிக் கீரைகள் உடலில் உள்ள அசுத்த நீரை வெளியேற்றும் ஆற்றல் மிக்கது. இரத்தத்தில் உள்ள உப்பின் அளவை சீராக்கி, உடலை நலமாக்க கூடியது.

சிறுநீரகத்தில் தேங்கிய நீரால் ஏற்பட்ட உடல் பருமனை, குறைக்கும் வல்லமை மிக்கது. சிறுநீரகத்தை தூய்மை செய்து, உடலில் உள்ள அசுத்த நீரை வெளியேற்றி, சிறுநீரகத்தை வலுவாக்கக்கூடியது, சண்டிக்கீரை.

சண்டிக் கீரை மசியல்:
நன்கு சுத்தம் செய்த சண்டிக் கீரையை சற்று கொதிக்க வைத்து, அதை தனியே வைத்துக்கொள்ளவும். பாசிப் பருப்பை நன்கு வேக வைத்து, தனியே வைத்து கொள்ளவும். ஒரு வாணலியில், வெங்காயம், சீரகம் இரண்டு மிளகாய்களை எண்ணையில் சற்று வதக்கி, பின்னர் வேக வைத்த பாசிப்பருப்பை அதில் கலந்து, அத்துடன் தனியே வைத்துள்ள சண்டிக் கீரையையும் சற்று மசித்து வாணலியில் இட்டு, அத்துடன் சிறிது மஞ்சள் தூள், இந்துப்பு தூவி, மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் :
நன்கு வெந்த பதம் வந்ததும், இந்த சண்டிக் கீரை மசியலை ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்துகொண்டு, மதிய உணவில், சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம், காலை மற்றும் இரவு சிற்றுண்டி நேரங்களில் தோசை மற்றும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேறும்.

சிறு நீர் பிரியும் :
சண்டி கீரை மசியலை அடிக்கடி உணவில் சேர்த்துவர, உடலில் உள்ள அசுத்த நீர் எல்லாம் வெளியேற ஆரம்பிக்கும். சிறுநீர் நன்கு பிரியும், உடலில் இதுவரை இருந்த வீக்கங்கள் எல்லாம், குறைந்து, முகமும் பொலிவாகி, உடலும் நலமாகும்.

சண்டிக் கீரை தேநீர்
சண்டிக் கீரையை நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, தண்ணீரில் இட்டு சுட வைத்து, வெந்தயத் தூள் சேர்த்து பின்னர் வடிகட்டி, தினமும் பருகி வர, சிறுநீர் நன்கு பிரியும்.

எலும்பு மஜ்ஜை தேய்மானம் நீங்கிட:
போதுமான உடற்பயிற்சி இன்மை, உடல் உழைப்பு இல்லாதிருத்தல், வயதிற்கு தக்க உணவுகளை எடுத்துக்கொள்ள தவறுதல் போன்ற காரணங்களால், எலும்பு மஜ்ஜை தேய்மானம் ஏற்படும் போது, ஆண்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் மூட்டு வலிகளால் அல்லல் அடைகின்றனர். இதைப் போக்க, சண்டிக் கீரையை தினமும் உணவில் சேர்த்து வர, கீரையில் உள்ள இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள், மூட்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்துவிடும்.

நுரையீரல் பாதிப்புகள் விலக :
பருவ நிலை மாற்றங்கள் மற்றும் குளிர்காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இருமல் மற்றும் சளி பாதிப்பால் சிரமப்படுகின்றனர். நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்படுவதால், இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைப்போக்க, சண்டி கீரையில் உள்ள தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்தே, பேருதவி செய்யும். சண்டி கீரை மசியலை தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டுவர, நுரையீரல் பாதிப்புகள் விலகி, சளித் தொல்லைகள் நீங்கிவிடும்.

வீடுகளில் வளர்க்கவேண்டிய மூலிகை மரம் :
சண்டிக் கீரை மரத்தை வீடுகளில் வளர்த்து, கீரைகளை அவ்வப்போது உணவில் சேர்த்து உண்டுவந்தால், நம் உடல் நலம், சீராகும். அருகில் வசிப்பவர்களுக்கும், நாம் இந்தக் கீரைகளின் நன்மைகளை சொல்லி, அவர்களுக்கும் சண்டி கீரையை கொடுத்து, உண்ண வைக்கும்போது, அந்த உதவிக்கு ஈடாக, வேறு ஒன்றும் அமையாது.

வீடுகளில் வளர்க்க வாய்ப்பு இல்லாதவர்கள், அருகில் உள்ள வீடுகளில், சண்டி கீரையின் பலன்களை சொல்லி, அவர்கள் வீடுகளில் வளர்த்துவரச்செய்து, அவர்களும் பிறரும் நலமுடன் வாழ, வழி காட்டலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: