காலை காபியுடன் இந்த 3 பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்!

0
3106

காலையில் எழுந்ததும் காபி குடிக்க நிறைய பேருக்கு பிடிக்கும். பலருக்கும் காபி குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்று தான் தெரியும். ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைப்போர்

காபியை காலையில் குடித்தால், உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா?

அதுவும் அந்த காபியுடன் ஒரு 3 பொருட்களைக் கலந்து குடித்தால், ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும். அந்த பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அந்த பொருட்கள் உடலில் செய்யும் மாற்றங்களைப் பற்றி தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் – 3/4 கப்
பட்டை – 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை தூள் – 1 டீஸ்பூன்
கொக்கோ பவுடர் – 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
பட்டை

பட்டையில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. இது பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. இது உடலினுள் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சிகளை எதிர்த்துப் போராடும். மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, சர்க்கரையை உடைத்து ஆற்றலாக மாற்றும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதோடு, இது இயற்கையாக உடலின் வெப்பத்தை அதிகரித்து, உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கும்.

தேன்

தேனில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், ஜிங்க் மற்றும் கால்சியம் உள்ளது. இவை அனைத்தும் கொழுப்புக்களை கரைக்கத் தேவையானவை. மேலும் இவை இயற்கை சர்க்கரையைக் கொண்டதால், செயற்கை சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்துவது நல்லது.

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, கண்ணாடி ஜாரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாத்து, தேவையான போது பயன்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:

தினமும் காலையில் காபி குடிக்கும் போது, சூடான காபியுடன் இந்த கலவையை 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் காபியின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: