பொன்னிற மேனியைக்கொடுப்பதோடு முடியை கருமையாகவும் வளர வைக்கும் ஆவாரம் பூ
உடலில் உள்ள வறட்சி தன்மை அகன்று முகத்தின் அழகினை மேலும் அதிகரிக்கும் ஆவாரம் பூ.
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்ற பழமொழிக்கு ஏற்ப ஆவாரம் பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வரும் போது மேனி அழகு அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். பூ, இலை, பட்டை மற்றும் வேர் என சகல பகுதிகளிலுமே மருத்துவ குணங்கள் நிறையப் பெற்ற ஆவாரம் பூவின் சில அழகுக் குறிப்புகளை இங்கு நோக்குவோம்.
பனிக்காலங்களில் உடல் வரண்டு போவது வழமை. இத்தகைய வறட்சியை நீக்குவதற்கு, ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா மற்றும் பால் சேர்த்து உடலில் தேய்த்து நன்கு உலர்ந்த பின்னர் கடலைமாவைக் கொண்டு கழுவி வரும் போது உடலில் வறட்சி நீங்கி உடல் மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
ஒரு சில பெண்களுக்கு முகத்தில் மீசை போன்று முடி வளருவதுண்டு. இதனை நீக்குவதற்கு கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ மற்றும் பூலான் கிழங்கு ஆகிய இம்மூன்றையும் சம அளவு எடுத்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வரும் போது முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் தானாகவே உதிர்ந்துவிடும்.
முடிக் கொட்டுவதை நினைத்து கவலைப்படுவோர் ஆவாரம் பூ செம்பருத்தி, தேங்காய்ப் பால் ஆகியனவற்றை சம அளவு எடுத்து நன்கு அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து குளித்து வரும் போது முடி கொட்டுவது உடனே கட்டுப்படுத்தப்படுவதுடன் கூந்தலும் நன்கு நீண்டும் அடர்த்தியாகவும் வளரும்.
சிறிது ஆவாரம் பூவைத் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி தலைகுளிக்கும்போது கடைசியாக வடிக்கட்டி வைத்துள்ள ஆவாரம் பூவின் தண்ணீரைக் கொண்டு முடியை அலசி வரும் போது கூந்தல் நன்கு பளபளவென்றிருப்பதுடன், உடல் நிறமும் அதிகரித்து புத்துணர்சியாகவும்; இருக்கும்.
ஆவாரம் பூவுடன் சிறு வெங்காயம் மற்றும் பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை அதனை சாப்பிட்டு வரும் போது உடல் ஒளியேற்றப் பட்டது போல வெண்மையாக மாறும்.
ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை நன்கு அரைத்து பெறப்பட்ட சாற்றினை நீர் பதம் போக நன்கு சுண்ட காய்ச்சி, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வரும் போது முடி கொட்டுவதும் குறைவடைந்து, தலையில் வழுக்கை ஏற்படுது கட்டுப்படுத்தப்படுவதுடன், முடியும் நன்கு கருகருவென்றும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
By: Tamilpiththan