இந்த உணவுகளில் நம் உடல் பாகங்களின் நச்சுக்களை அகற்றும் தன்மை அதிகமாக உள்ளது ! இவற்றை அதிகம் உணவில் சேருங்க!
எமது வெளிப்புற உடல் சுத்தத்தினைப் பேணுவதற்கு நாளாந்தம் குளிப்பது எவ்வாறு அவசியமான ஒன்றாக உள்ளதோ, அதேபோல உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை இயற்கையான முறையில் வெளியேற்றுவதற்கும், இக்கழிவகற்றல் செயறப்hடு சீராக நடைபெறுவதற்கும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதுடன், விசேடமாக சிலவகையான உணவுகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.
மேலும், மிதமிஞ்சிய அளவில் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதனால்; ஏற்படக் கூடிய தாக்கங்களை சமாளிக்க கூடிய நச்சுப்பண்பை நீக்கும் சில வகையான உணவுகளை சாப்பிடுவதனால் பலருக்கும் பாரிய சவாலாக உள்ள உடல் எடையை குறைக்க உதவுவதுடன், உங்கள் நினைவாற்றல் திறனை அதிகரித்து, மனநிலையை மேம்படுத்தும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கைக்குத்தல் அரிசி
கைக்குத்தல் அரிசியில் நச்சுத் தன்மையை நீக்க உதவிடும் வைட்டமின் பி, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ்; என்பனவும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளதனால், பெருங்குடலை சுத்தப்படுத்துவதுடன், இதிலுள்ள செலினியம் கல்லீரலைப் பாதுகாத்து உங்கள் மேனியின் நிறத்தினை மேம்படுத்தும்.
பூண்டு
பொதுவாக இதயத்திற்கு நல்லது என கூறப்படும் பூண்டு அதிலுள்ள நச்சுயிர் எதிர்ப்பி, பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் காரணமாக நச்சுப் பண்பை நீக்கும் உணவாகவும் செயல்படுகின்றது. மேலும், பூண்டில் உள்ள அல்லிசின் எனும் ரசாயனம் து இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி நச்சு பொருட்களுக்கு எதிராக போராடுகின்றது.
பீட்ரூட்
பீட்ரூட்டில் உள்ள மெக்னீசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி என்பன கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துவதுடன், கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறதனால், பீட்ரூட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணுவதுடன், ஜூஸ் போட்டுக் குடிப்பதும் சிறந்த பலனளிக்கும்.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதனால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவதுடன், உங்கள் கல்லீரலை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உட்பட அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கின்றது.
பழங்கள்
நற்பதமான பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதுடன், இவைகளில் உள்ள கலோரிகள் அளவும் மிகக் குறைவாக காணப்படுவதனால், உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதுடன், சருமம் மற்றும் கூந்தலுக்கு மட்டும் மாயங்களை நிகழ்த்தாமல், இலகுவான சமிபாட்டிற்கும் உதவுகின்றதனால், நற்பதமான பழங்களை காலை உணவுடனோ அல்லது நொறுக்குத் தீனியாகவோ பயன்படுத்து நல்லது.
இஞ்சி
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதனால், அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், குமட்டலில் இருந்து நிவாரணம், செரிமான அமைப்பில் மேம்பாடு, வயிற்று பொருமல் மற்றும் வாய்வை குறைக்க உதவுகின்றது. ஆகவே நீங்கள் குடிக்கும் ஜூஸ்களில் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுதல் அல்லது சீரான முறையில் இஞ்சி டீ குடித்தல் என்பன உங்களுக்கு மிகச்சிறந்த பலனைத் தரும்.
எலுமிச்சை
நச்சுப் பண்பை நீக்கும் புகழ் பெற்ற மற்றும் சிறப்பான உணவுகளில் ஒன்றாக விளங்கும் எலுமிச்சையில் வைட்டமின் சி எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அடங்கியுள்ளதனால், அது உங்கள் சருமத்திற்கு பல்வேறுபட்ட மாயங்களை நிகழ்த்துவதுடன், அல்கலைன் தாக்கம் ஏற்பட்டு உடலின் அமிலகாரச் சமன்பாடு மீட்கப்படுவதுடன், இயக்க உறுப்புகளை உருவாக்கும் நோய்களுக்கு எதிராகவும் போராடுகின்றது. கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்ட வெந்நீரை குடித்து உங்கள் நாளை தொடங்கும் போது உங்கள் உடலில் இருந்து நச்சுப்பொருட்கள் வெளியேறி உடல் சுத்தமாகுவதுடன், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பும் மேம்படும்.
By: Tamilpiththan