உங்களது கல்லீரலில் அதிகப்படியான நச்சுக்கள் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!

0
6050

கல்லீரல் மட்டுமே உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பு என்று சொல்லிவிட முடியாது… ஆனால் இது உடலின் மிக முக்கியமான உள்ளுறுப்பு ஆகும். இது உடலின் சக்தியை சேமித்து வைக்கிறது. இது ஹார்மோன்களின் இயக்கத்திற்கு காரணமாக உள்ளது. மேலும் இது இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது. அப்படியென்றால் இதனுடைய முக்கியத்துத்தை பற்றி உங்களிடம் சொல்ல தேவையில்லை.. உங்களுக்கே இதன் முக்கியத்துவம் பற்றி புரிந்திருக்கும் அல்லவா…?

கல்லீரல் கோளாறு என்பது மிகவும் ஆபத்தை தரும் ஒன்று. கல்லீரல் பழுதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அந்த பிரச்சனையை எளிதாக சரி செய்து விடலாம். ஆனால் இதனை நீங்கள் அப்படியே விட்டுவிட்டால் அது பெரிய ஆபத்திற்கு காரணமாக அமைந்துவிடும். இதன் ஆரம்ப கால அறிகுறிகளை வைத்து இது தான் பிரச்சனை என்று கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் உடலில் நிகழும் சில முக்கியமான மாற்றங்களை கவனிப்பதன் மூலமாக உங்களது கல்லீரலின் நிலையை அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த பகுதியில் உங்களது கல்லீரலில் நச்சுக்கள் அதிகப்படியாக படிந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் ஏழு அறிகுறிகளை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து பயனடையுங்கள்.

களைப்பு
வழக்கத்திற்கு மாறான களைப்பு மற்றும் சோர்வு என்பது கல்லீரல் கோளாறுடன் சம்பந்தப்பட்டதாகும். நீங்கள் எந்த ஒரு வேலையையுமே செய்யாமல் இருந்தாலும் கூட மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் உணர்வது, உங்களது கல்லீரலில் உள்ள பாதிப்பை விளக்குகிறது. இந்த சோர்வுடன் சேர்த்து வாந்தி, கவனக் குறைவு, வயிற்றுப் போக்கு போன்றவை உண்டாகும். இதை மன சோர்வு மற்றும் உறுதியற்ற தன்மை என கொள்ளலாம். இவை கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளின் அறிகுறிகள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவை ஆரோக்கிய குறைப்பாட்டிற்கான காரணங்களாகவும் உள்ளன. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் மருத்துவரை மறக்காமல் சந்திக்க வேண்டியது அவசியமாகும்.

மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் பாதிப்புடன் சம்பந்தப்பட்டதாகும். மஞ்சள் காமலை என்பது உங்களது சருமம் மற்றும் நகங்கள் மஞ்சள் நிறம் வெளிப்படும். இது தலைசுற்றல், இனம் புரியாத உடல் வலிகள், வாந்தி போன்றவற்றை உண்டாக்கும். மஞ்சள் காமலை அறிகுறிகள் தெரிந்தால் உங்களது கல்லீரலில் பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தமாகும். இதனை அப்படியே விட்டுவிட்டால் அது நாளடைவில் கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே மஞ்சள் காமலை அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதிக கொழுப்பு
அதிக கொழுப்பு அளவு என்பது உடலில் பலவகையான ஆரோக்கிய கோளாறுகள் உண்டாக காரணமாகின்றது. இது இருதய கோளாறுகள், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகள், உடலில் அதிக எடை உண்டாதல், கல்லீரல் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு காரணமாகிறது. நீங்கள் உடலில் உள்ள கொழுப்பு அளவுகளை அதிகமாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உங்களது உடலில் அதிகளவு கொழுப்பு இருப்பது உங்களது கல்லீரலில் கொழுப்பு அளவு அதிகமாக இருப்பதை காட்டும். இந்த் பிரச்சனைகளை போக்க உங்களது இரத்தத்தில் எவ்வளவு கொழுப்பு இருக்கிறது என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இரத்தம் உறைதல்
பொதுவாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமானவர்களுக்கு இரத்தம் உறையும் வேகத்தை விட வேகமாக தங்களுக்கு இரத்தம் உறைந்து விடுவதை உணர்வார்கள். இது கல்லீரலில் உள்ள அதிகப்படியான நச்சுக்களால் உண்டாகலாம். கல்லீரல் என்பது இரத்தம் உறைதல் மற்றும் இரத்தில் உள்ள கொழுப்புகளின் செயல்பாடுகளை கவனிக்க உதவியாக உள்ளது. இந்த கல்லீரலுக்கு தனது செயல்பாடுகளை செய்வதற்கு தடை உண்டாகும் போதும் இந்த இரத்தம் உறைதல் வழக்கத்தை விட வேகமாக இருக்கும். எனவே உடனடியாக மருத்துவரின் அறிவுரையை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கவனக் குறைவு
கல்லீரலில் நச்சுக்கள் சேர்ந்திருந்தால் எதிலும் சோர்வு, கவனக்குறைவாக இருப்பது போன்ற பிரச்சனைகள் உண்டாகும். சாப்பிட கூட தோன்றாமல் போய்விடும். மேலும் சீக்கிரமாக உடல் எடை குறைவது, மன அழுத்தம் உண்டாவது போன்ற பிரச்சனைகள் உண்டாகிவிடும் சூழல் உருவாகும். இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் சென்று உங்களது உடல் நலனை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம்
உங்களது வீக்கமான கால்களும், வீக்கமான அடிவயிறுமே உங்களது கல்லீரல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை பற்றி சொல்லிவிடும். மேலும் வீக்கமான கால்கள் மற்றும் அடிவயிறு ஆகியவை என்றுமே உடல் ஆரோக்கியத்திற்கான அறிகுறியாக இருக்காது. இது போன்ற அறிகுறிகள் தோன்றினால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

சரும பிரச்சனைகள்
உங்களது கல்லீரலானது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் உங்களது கல்லீரல் பலவீனமாகிவிடும் போது அது பல வகையான சரும பிரச்சனைகளை தோற்றுவிக்கும். உங்களுக்கு அலர்ஜிகள் எல்லாம் உண்டானால் அது சருமத்தில் தான் வெளிப்படும். அதே போல தான் கல்லீரல் பாதிப்படைந்தாலும் அதை உங்களது சரும காட்டிக் கொடுத்து விடும்.

மலத்தில் நிற மற்றம்
கல்லீரல் பாதிக்கப்படும் போது இது போதுமான பித்த நீரை உற்பத்தி செய்யாது இதனால் மலத்தில் நிற மாற்றம் ஏற்படும்.இவ்வாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நீர் கோர்த்தல்
இது ஒரு பொதுவான அறிகுறி ஆகும்.கல்லீரல் பாதிப்பு அடைந்தால் கணுக்கால் மற்றும் கால்களில் நீர் தேங்கி வீங்கி காணப்படும்.இவ்வாறு நேர்ந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். திரவங்கள் வெளிப்புற திசுக்களில் தேங்குவதால் வீக்கம் ஏற்படும்.சிறுநீரகக் கோளாறுகள்,ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள்,இதய செயலிழப்பு மற்றும் நிணநீர் நோய் போன்ற காரணங்களாலும் நீர் தேங்கிவிடும்.

பூண்டு
கல்லீரலில் சுரக்கும் நொதிநீர்களை தூண்டி நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

பச்சை காய்கறிகள்
பச்சையம் நிறைந்த பசலைக்கீரை, வெந்தயக்கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ் முதலிய நச்சுப் பண்பு நீக்கிகள் (detoxifiers) கல்லீரலுக்கு நல்லது.

மஞ்சள்
பொறியல் வகைகளுக்கு மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களில் இருக்கும் புற்றுநோய் காரணிகளை கல்லீரலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது.

எலுமிச்சை
காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது கல்லீரலை தூண்டுகிறது. எனவே தினமும் காலையில் எலுமிச்சை சாறை பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பீட்ரூட்
இது கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுகளை ரத்தத்துடன் கலப்பதை தடுத்து, அவற்றை வெளியேற்றும் பணியை செய்கிறது.

திராட்சை
வைட்டமின் சி மறும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் இதில் அதிக அளவில் உள்ளன. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கக் கூடியது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: