உடல் எடையை குறைக்க கடினமாக உள்ளதா? வயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களைக் கரைக்கும் ஓர் அற்புதமான பானம்!

0
5444

கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி உங்கள் உடலின் பெரும்பாலான பகுதியில் உள்ள கொழுப்புக்களை கரைத்திருந்தாலும், வயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் மட்டும் கரைந்திருக்காது. இத்தகைய வயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களைக் கரைக்கும் ஓர் அற்புதமான பானத்தை; குடித்து தொப்பையைக் குறைத்துக் கொள்ள சிறிது முயற்சிப்போம்.

தேவையான பொருட்கள்

திராட்சை ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்

தேன் – 1 தேக்கரண்டி

ஆப்பிள் சீடர் வினிகர் – 2 தேக்கரண்டி

தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் 1 கப் ஆரஞ்சு ஜூஸ் அல்லது திராட்சை ஜூஸ் ஊற்றிக் அதில்; 1 தேக்கரண்டி தேன் மற்றும் 2 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து உடல் எடையைக் குறைக்க உதவும் பானத்தை தயரிக்க முடியும்.

எப்படி பயன்படுத்துவது?

இந்த பானத்தை உணவு உண்பதற்கு முன்னர் ஒரு வார காலம் தொடர்ந்து குடித்து வரும் போது ஒரே வாரத்தில் உங்கள் உடல் எடை மற்றும் தோற்றத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் உங்கள் கண்களாலேயே காண முடியும். எனினும் இந்த பானத்தை மீண்டும் ஒருமுறை நீங்கள் குடிக்க நினைத்தால், இரண்டு வார காலம் இடைவெளி விட்டு, பினனர்; மீண்டும் ஒரு வாரம் தொடர்ந்து குடியுங்கள்.

குறிப்பு

ஒருவேளை இந்த பானத்தைக் குடிக்கும் போது, நீங்கள் ஏதேனும் உடல் அசௌகரியத்தை உணர்ந்தால், உடனே இந்த பானத்தைக் குடிப்பதை நிறுத்திவிடுவதுடன் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சரியான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: