உங்கள் ராசி என்ன? இதுதான் உங்கள் மனதில் இருக்குமாம்

0
1243

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களின் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் மற்றும் அவர்களின் குணாதிசயங்களை பற்றி கூறுகிறது.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் உலகத்தையே தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவார்கள். மேலும் இவர்களிடம் கொஞ்சம் பிடிவாத குணமும் இருக்கும்.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் சுயமாக முடிவு எடுத்து, நேர்மையாக செயல்படுவார்கள். இதனால் இவர்களின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கலாம்.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். இவர்களை புரிந்துக் கொள்வது கடினம். நல்லநேரம் வரும்வரை காத்திருப்போம் என்று இருப்பார்கள்.

கடகம்
கடகம் ராசிக்காரர்கள் எப்போதும் நிபந்தனையுடன் இருப்பதை தான் விரும்புவார்கள். எப்போதும் இவர்கள் பாதுகாப்பாகவும், கருணையாகவும் இருப்பவர்கள் என்பதால், எதையும் வெளிப்படையாக பேசுவார்கள்.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் அதிகமாக எதையும் தன்னுடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அனைவரின் பார்வையும் தன்மீது இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அவர்களை பற்றி அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எதையும் விவாத முறையில் சிந்திக்கும் திறன் கொண்டவர்கள். பெரிய பிரச்சனைகளையும் எளிதாக முடிப்பார்கள். பாவம் பார்ப்பது இவர்களுக்கு பிடிக்காது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் எதையும் சரியான சமநிலையில் வைத்துப் பார்க்கக் கூடியவர்கள். மனதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அவரை யாரும் பின் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களின் அணுகுமுறை சற்று மர்மமாகவும், நீண்ட நேரம் பேசியும், பழகியும் கூட இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. இவர்களை முழுவதுமாக புரிந்துக் கொள்வது கடினம். ஏனெனில் இவர்கள் தங்களது குணாதிசயங்களை நொடிகளில் மாற்றிக் கொள்வார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் நெருப்பை போன்றவர்கள். வியக்கும் வலிமையை கொண்டவர்கள். துணிந்து செயல்படுவார்கள். இவர்களை சுற்றி இருக்கும் நபர்களையும் இவர்களது எண்ணங்களோடு ஒத்துப்போக செய்து விடுவார்கள்.

மகரம்
மகரம் ராசிக்காரர்கள் கடின உழைப்பாளி. என்ன செய்தாலும் வேலையை முடித்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பார்கள்.

கும்பம்
குடும்பம் ராசிக்காரர்களுக்கு தர்க்கமான முறை தான் தன்னிறைவை தரும். பயணம் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். புதியவைகளை கற்றுக் கொள்ள விரும்புவார்கள்.

மீனம்
மீனம் ராசிக்காரர்கள் தங்களை பற்றி அறிந்துக் கொள்வதிலேயே அவர்களுக்கு சற்று குழப்பம் இருக்கும். பச்சோந்தி போல இவர்களது மனநிலை மாறிக் கொண்டே இருக்கும். ஆழமாக அக்கறையுடனும், உணர்ச்சிப்பூர்வமாகவும் செயல்படக் கூடியவர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: