உங்கள் மகளை நான் கடத்த போகிறேன்! தல தோனியை மிரள வைத்த நடிகையின் அதிரடி ட்விட்!

0
1163

பிரபல பாலிவு நடிகை ப்ரீத்தி ஜிந்தா, இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஜிவா குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி சென்னை அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின, இந்த போட்டியின் முடிவில் சென்னை அணியின் கேப்டன் தோனியுடன் நடிகையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா பேசினார்.

இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ரீத்தி ஜிந்தா, ‘கேப்டன் கூல் தோனிக்கு, நான் உட்பட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த முறை எனது அன்பு அவரது செல்ல மகள் ஸிவாவை நோக்கி மாறியுள்ளது.

இந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அவரிடம் நான் ஜிவாவைக் கடத்தலாம் என இருக்கிறேன். எச்சரிக்கையாக இருங்கள் என கூறினேன். இந்தப் புகைப்படத்துக்கு நீங்கள் ஒரு தலைப்பு கொடுங்கள் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், இருவரும் யதார்த்தமாகவும், அழகாகவும் உள்ளீர்கள் என்றும் புகைப்படத்திற்கான தலைப்பாக ‘வெற்றி பெற்றதற்கு மன்னித்து விடுங்கள்’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article79 ஆண்டுகளாக பேராசிரியை வீட்டில் மின்சாரம் இல்லை! காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 10.05.2019 Today rasi palan – 10.05.2019 !