உங்கள் தொப்புளில் நோய் தொற்றா? இதோ எளிய வழிமுறைகள்!

0
939

பொதுவாக நம் தொப்புளில் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன.

தொப்புளை ஒருவர் தொடர்ச்சியாக தொடும் போது, அதுவும் துளையிட்ட பின்பு அந்த பகுதியை தொடும் போது எளிதில் தொற்றுகள் ஏற்பட்டு விடுகின்றது.

ஒருவரது தொப்புளில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், தொப்புளில் வலி, தொப்புளில் வீக்கம் மற்றும் அழற்சி, தொப்புள் பகுதியில் அரிப்பு, தொப்புளில் இருந்து பச்சை, மஞ்சள் அல்லது ப்ரௌன் நிற திரவம் வெளிவருவது, தொப்புளில் இருந்து துர்நாற்றம் வீசுவது, குமட்டல் மற்றும் தலைச்சுற்றல், தொப்புளில் இருந்து இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் தென்படும்.

இந்த தொற்றுகளை சரிசெய்யும் இயற்கை வழிகளை நாம் கையாளுவோம்.

தேங்காய் எண்ணெயை விரலால் தொட்டு தொப்புளில் வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை தொப்புளில் எண்ணெயை வைத்து வந்தால், விரைவில் குணமாகிவிடும்.

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரை தொப்புளில் தினமும் பலமுறை ஊற்றுங்கள். இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

மிதமான சூடு கொண்ட நீரில், சுத்தமான துணியை நனைத்து பிழிந்து, அந்த துணியால் தொப்புள் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை ஒத்தடம் கொடுத்து வர வேண்டும்.

1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, அந்த எண்ணெய் கலவையை தொப்புளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தாலே போதுமானது.

2-3 துளிகள் புதினா எண்ணெயை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கலந்து, தொப்புளில் அந்த எண்ணெயைத் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை என செய்து வர வேண்டும்.

டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரில், 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி அந்த கலவையை தொப்புளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் செய்து வருவது நல்லது.

1 டேபிள் ஸ்பூன் 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை 1-2 டேபிள் ஸ்பூன் நீருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி, தொப்புளில் அந்த கலவையைத் தடவி காய வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர வேண்டும்.

கற்றாழை ஜெல்லை தொற்றுள்ள தொப்புள் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தொப்புளைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்ய ஒரு நல்ல பலனை விரைவில் காண முடியும்.

1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை தொற்று ஏற்பட்ட தொப்புளில் தடவி நன்கு காய்ந்த பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி குறைந்தது ஒரு முறையாவது செய்ய வேண்டும்.

ஒரு கையளவு வேப்பிலையை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தொப்புளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் நீரால் அப்பகுதியைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு பஞ்சுருண்டையில் சில துளிகள் ஆல்கஹாலை எடுத்து, நேரடியாக பாதிக்கப்பட்ட தொப்புள் பகுதியில் தடவி ஊற வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை செய்து வர நல்ல பயன் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: