இந்த கனவுல ஒன்னாவது உங்களுக்கு வந்துச்சா! அப்ப உங்களுக்கு நிச்சயம் அதிர்ஷ்டம் காத்திருக்கு!

0
5843

செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. கடவுளை வழிபட பாதி ஒரு காரணமாக இருந்தாலும் அதன் மூலம் கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்று செல்வமும், அதிர்ஷ்டமும் பெற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமுமாகும். செல்வத்திற்கும், அதிர்ஷ்டத்திற்கும் கடவுளாக இருப்பது லக்ஷ்மி தேவிதான்.

லக்ஷ்மி தேவியின் அருள் உங்களுக்கு கிடைப்பதற்கு முன் உங்களுக்கு சில அறிகுறிகள் தெரியும். அதனை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களை நோக்கி பணம் வரப்போகிறது எனபதற்கான அறிகுறி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலும் அது கனவுகளாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த பதிவில் என்னென்ன கனவுகள் உங்களை நோக்கி பணம் வரப்போவதை உணர்த்தும் என்று பார்க்கலாம்.

கனவுகள்
லக்ஷ்மி தேவியின் அருள் உங்களுக்கு கிடைக்க போவதன் அறிகுறியாக கனவுகள் கூட இருக்கலாம். கனவுகளுக்கென்று ஒரு தனி வரலாறு உள்ளது. கனவுகள் நடக்கப்போவதை முன்கூட்டியே கூறுவதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளது. எந்தெந்த கனவுகள் உங்களை நோக்கி பணம் வரப்போவதை உணர்த்தும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

கடவுள்
ஒருவேளை நீங்கள் கனவில் ஆண் கடவுளையோ அல்லது பெண் கடவுளையோ பார்த்தால் வரும் காலங்களில் உங்களை நோக்கி வெற்றியும், செல்வமும் வரபோகிறது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

பெண்கள்
பெண்கள் எப்பொழுதும் லக்ஷ்மி தேவியின் அடையாளம் என்று கூறப்படுபவர்கள். ஒருவேளை நீங்கள் கனவில் முன்பின் தெரியாத பெண்ணை கண்டாலோ அல்லது பெண் மகிழ்ச்சியாக ஆடுவதை போல கண்டாலோ உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருளால் செல்வம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

பறவைகள்
சில பறவைகள் உங்கள் கனவில் வருவது உங்களை செல்வம் தேடி வருவதை உணர்த்தும். குறிப்பாக மீன்கொத்தி மற்றும் நாரை உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டக்காத்து அடிக்க போகிறது என்று அர்த்தம்.

நெல்லிக்காய்
கனவில் நெல்லிக்காய் அல்லது தாமரை மலரை பார்த்தால் அடுத்த சில நாட்களில் உங்களை நோக்கி செல்வம் வரப்போகிறது என்று அர்த்தம். மேலும் இது நீங்கள் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியப்போவதன் அறிகுறியாகவும் இருக்கும்.

விவசாயி
விவசாயிகள் நிஜ வாழக்கையில் மட்டுமல்ல கனவில் கூட நம் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் ஆவார்கள். விவசாயி நிலத்தில் இருப்பது போல கனவில் வந்தால் நீங்கள் சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தை பெற போகிறீர்கள் என்று அர்த்தம்.

விளக்கு
உங்கள் கனவில் விளக்கேற்றுவது போலவோ அல்லது தங்கம் வாங்குவது போலவோ வந்தால் விரைவில் நீங்கள் பெரிய சொத்துக்களை வாங்க வாய்ப்புள்ளது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

மோதிரம்
நகைகள் என்னும் பட்சத்தில் அதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது மோதிரம்தான். உங்களுக்கு யாராவது மோதிரம் போடுவது போலவோ அல்லது நீங்கள் யாருக்காவது போடுவது போலவோ கனவு வந்தால் எதிர்பாராத இடத்தில் இருந்து உங்களுக்கு செல்வம் வரப்போவது உறுதி.

பசு
இந்து மதத்தில் பசு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உங்கள் கனவில் பசு வருவது லக்ஷ்மி தேவியே வருவதற்கு சமமாகும். பசுவிடம் பால் கறப்பது போலவோ அல்லது பால் கற்பதை நீங்கள் வேடிக்கை பார்ப்பது போலவோ கனவு வருவது கூட செல்வத்தின் அறிகுறிதான்.

மிருகங்கள்
சில மிருகங்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக இருக்கிறது. உங்கள் கனவில் யானையை பார்த்தால் நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரப்போகிறது என்று அர்த்தம். அதுவே வெள்ளை குதிரையை பார்த்தால் உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று அர்த்தம். ஆனால் கனவில் வெள்ளை குதிரை வருவது மிகவும் அபூர்வமானதாகும்.

எலி
எலி நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கலாம். ஆனால் கனவை பொறுத்தவரை எலி உங்கள் கனவில் வருவது அதிர்ஷ்டம் உங்களை தேடி வருவதன் அறிகுறியாகும். எலி உங்களுக்கு தெரியாமல் உங்கள் வீட்டிற்குள் நுழையுமோ அதேபோல உங்களுக்கே தெரியாமல் செல்வம் உங்களை தேடி வரும்.

தேள்
பயமுறுத்தும் மிருகங்களான பாம்பு, தேள் போன்றவை கனவில் உங்களுக்கு செல்வம் வரப்போவதை உணர்த்துவதாக இருக்கிறது. பாம்பு தலையை தூக்கி காட்டுவது போல கனவு வந்தால் உங்களுக்கு பிரச்சினைகளுடன் பணமும் சேர்ந்து வரப்போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

கிளி
தேனீ, கிளி போன்ற பறவைகள் கனவில் வருவது நீங்கள் திடீரென உச்சத்திற்கு செல்ல போவதற்கான அறிகுறியாகும். ஒருவேளை இறந்து போன பறவைகள் கனவில் வந்தால் கவலைப்படாதீர்கள் அதுவும் செல்வத்தின் அறிகுறிதான்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்க ராசிய சொல்லுங்க! நீங்க எந்த விஷயத்துக்கு செம காண்டாவீங்கனு நாங்க சொல்றோம்!
Next articleதெரியாமகூட இந்த 5 ராசிக்காரங்கள லவ் பண்ணிடாதீங்க! அதுக்குலாம் செட்டே ஆகமாட்டாங்க!