உங்களுக்கு மலட்டுத்தன்மை உள்ளதா என்பதை எளிய முறையில் தெரிந்து கொள்வது எப்படி?

0
662

மாறி வரும் இன்றைய சூழலில் பலர் நீண்ட நாட்களாக பரிசோதனைகள் செய்தும் கூட கருவுற முடியவில்லை என்று மருத்துவரை அணுகுகின்றனர். முதலில் எல்லாம் ஒரு பெண்ணால் தாய் ஆக முடியவில்லை என்றால், அதற்கு காரணம் அந்த பெண் மட்டும் தான் என்று இந்த சமூகம் அந்த பெண்ணை மலடி என்று தாழ்த்தி பேச தொடங்கியது. ஆனால் இப்போது தான் சமூகத்தில் விழிப்புணர்வு வர தொடங்கிவிட்டது. மலட்டுத்தன்மையானது ஆண்களிடத்திலும் உள்ளது என்பதை இந்த சமூகம் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது.

குழந்தையின்மை என்பது இன்று பலரது பிரச்சனையாக இருக்கும் காலகட்டத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் நவீன மருத்துவத்தில் இதற்கான தீர்வுகள் பல இருக்கின்றன. அப்படி எந்த மருத்துவமும் உங்களுக்கு கை கொடுக்கவில்லை என்றால் மனமுடைந்து போக வேண்டாம்.. எத்தனையோ குழந்தைகள் தாய், தந்தை அன்பிற்காக ஏங்கி கிடக்கின்றன.. அந்த குழந்தைகளில் ஒன்றை தத்தெடுத்து வளர்த்துங்கள்.. உங்களது வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகும். மேலும், இந்த பகுதியில் உங்களது குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையினை எப்படி எல்லாம் கண்டறியலாம் என்பது பற்றி தெளிவாக காணலாம்.

நீங்களே பரிசோதனை செய்யலாம் நீங்கள் கர்ப்பமாகவில்லை என்றால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டாம். முதலில் இந்த முறையை டிரை செய்து பாருங்கள். பெண்களுக்கு அவர்களது கர்ப்பமடையும் திறனானது, அண்டவிடுப்பு நாட்களிலும், அண்டவிடுப்பிற்கு 1 அல்லது 2 நாட்கள் முன்னரும் இருக்கும். பலர் இதனை கடைபிடிப்பதே கிடையாது. பெண்கள் தங்களது மாதவிடாய் கால சுழற்சியை கணக்கிட்டு கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உடல் ரீதியான பிரச்சனை பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதில் ஏதேனும் பிரச்சனை, அளவுக்கு அதிகமான மாதவிடாய் பிரச்சனைகள், மிகவும் குறைந்த அளவு உதிரப்போக்கு மட்டுமே உண்டாதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக தகுந்த சிகிச்சையினை மருத்துவரிடம் தாமதிக்காமல் பெற வேண்டியது அவசியமாகும்.

மருத்துவ பரிசோதனைகள் என்ன? விந்தணு ஆய்வு, உடல் ஆரோக்கிய பரிசோதனை, இரத்த பரிசோதனை ஆகியவை ஆண்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளாகும். இவை வலியற்ற பரிசோதனை முறைகளாகும். இது தவிர மேலும் சில பரிசோதனை முறைகள் உள்ளன. இவை சற்று வலியை உண்டாக்கலாம். அவையாவன, எண்டோமெட்ரியல் பைபோஸி (endometrial biopsy), லாப்ரோஸ்கோபி (laparoscopy) அல்லது ஹஸ்டிரோஸால்லிங்கோகிராம் (hysterosalpingogram) போன்றவையாகும்.

துணையுடன் ஆலோசனை இந்த பரிசோதனைகளை செய்யும் முன்னர் நீங்கள் உங்களது துணையிடம், எத்தனை பரிசோதனைகளை செய்து பார்க்கலாம் என்பது பற்றி கலந்து ஆலோசனை செய்து கொள்ளுங்கள். சில சமயங்களில் பல பரிசோதனைகள் செய்தாலும் கூட, கர்ப்பமடையாததிற்கான காரணம் தெரியாமல் போகலாம். அதனால் தான் நீங்கள் உங்களது துணையிடம் இது பற்றி ஆலோசனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்

இதில் உள்ள பிரச்சனை? சில பொதுவான பரிசோதனைகளான விந்தணு பரிசோதனை, இரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் போன்றவற்றினால் எந்த ஒரு பிரச்சனைகளும் உண்டாகாது. மற்ற சில மருத்துவ பரிசோதனைகளான, எண்டோமெட்ரியல் பைபோஸி (endometrial biopsy), லாப்ரோஸ்கோபி (laparoscopy) அல்லது ஹஸ்டிரோஸால்லிங்கோகிராம் (hysterosalpingogram) போன்றவற்றிற்கு பிறகு கண்டிப்பாக சில மாறுதல்கள் உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: