உங்களுக்கு பாலியல் கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

0
1452

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பல அர்த்தங்கள் உண்டு. அந்த வகையில் பாலியல் சம்பந்தப்பட்ட கனவுகள் வருவதற்கும் பல அர்த்தங்கள் உள்ளது.

ஆனால் இம்மாதிரியான கனவுகள் வருவதற்கு, பாலியல் மீது அலாதியான ஆர்வம் இல்லை. அது சிலரை சுற்றி நடக்கும் நுட்பமான உளவியல் மாற்றங்களாகக் கூட இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாலியல் கனவுகள் வந்தால் என்ன அர்த்தம்?

கனவில் தங்களது காதலை வெளிப்படுத்துமாறு வந்தால், அது நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அல்லது ஈடுபடப் போகும் காரியங்கள் வெற்றி அடையப் போகிறது என்று அரத்தமாம்.

சிலருக்கு அவர்களின் முன்னாள் துணையின் உடலுறவு பற்றி கனவு வந்தால், அது அவர்களின் உறவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

கனவில் கருத்தரிப்பது போன்று வந்தால், அது உங்கள் வாழ்வு அல்லது உறவில் நல்ல வளர்ச்சிக்கு வழிவகுக்கப் போகிறது என்பதன் அறிகுறியின் அர்த்தமாகும்.

முகம் தெரியாத ஒரு நபருடன் உடலுறவு கொள்வது போல கனவு வந்தால், அது உங்கள் வாழ்வில் ஏற்பட இருக்கும் மாற்றம் அல்லது புதிய வாய்ப்புக்களை ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பதற்கான அர்த்தம்.

ஒரே பாலினத்தை சேர்ந்த நண்பர்களுடன் உறவு கொள்வது போன்ற கனவு வந்தால், அது இருவரின் நட்புக்குள் உள்ள பாதுகாப்பின்மையை அல்லது அவர்கள் திறமையின் மீது உள்ள பொறாமை என்று அர்த்தம்.

பெண்கள் வாயின் ஓரத்தில் முத்தம் கொடுப்பது போன்ற கனவு வந்தால், அது உங்களை நோக்கி ஏதோ ஒரு சண்டை அல்லது சச்சரவுகள் வரப் போகிறது என்று அர்த்தம்.

பாலியக் குறித்து தொடர்ச்சியாக கனவு வந்தால், அது உங்களிடம் உள்ள உறுதியற்ற இயல்பைக் குறிக்கிறது அல்லது நீங்கள் அடைய விரும்பியதை வாழ்வில் அடைய முடியாது என்று அர்த்தம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: