உலகிலேயே மிக முக்கியமான உணவுப் பொருள்களில் ஒன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு.
ஆசிய நாடுகளில் அரிசி பிரதான உணவாக இருக்கிறதோ அதை போன்று தான் ஆப்பிரிக்க நாடுகளில் கிழங்கு பிரதான உணவாக இருக்கிறது.
இந்த கிழங்கானது 4,500 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்க கண்டத்தில் பயிரிடப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
மேலும் போர்த்துகீசியர்கள் தான் இந்த கிழங்கு உணவை இந்தியா, இந்தோனேஷியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு அறிமுகம் செய்ததாகவும் தெரியவருகிறது.
இது இனிப்பாக இருந்தாலும், சாப்பிட்டவுடன் வயிறு திம் என நிறைவதாலும் இதை உண்டால் வெயிட் போடும் என தவறான நம்பிக்கை உள்ளது.
ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் பைபர் (நார்சத்து) அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றும், பைபர் கிழங்கு விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடும்.
அதனால் உடலில் கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும் இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது.
உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருவதுடன், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தவிர்த்து, இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு அதிக விட்டமின்களை கொண்டுள்ளதால், இளமையில் ஏற்படும் முதுமை தோற்றத்தை தடுக்கிறது, மேலும் சுவாசப் பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.
இதில் இரும்பும், மாங்கனீஸும் அதிக அளவில் இருப்பதால் நரம்புகள், இதயம், ரத்தநாளம் ஆகியவை சீராக செயல்பட இது உதவுகிறது.
இது ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை குறைக்கும் மிக சிறந்த தாதுப்பொருள்.
இது எல்லாவற்றையும் விட முக்கியமாக இதில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் பிளட் பிரஷரை குறைக்க உதவும் மிக முக்கிய மினரல்.
அதனால் சர்க்கரைவள்ளி கிழங்கை உண்பது ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதை குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம், அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம், இரண்டுக்கும் அதுவே அருமருந்து.