உங்களால் முடிந்த ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் இப்படி செய்தால் கோடி கோடியாய் பணம் வந்துசேரும்!

0

உங்களால் முடிந்த ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் இப்படி செய்தால் கோடி கோடியாய் பணம் வந்துசேரும்!

துளியும் கையில் காசு நிற்கவில்லையா? கோடி கோடியாய் பணம் சேர நாளை இதை மட்டும் பண்ணுங்க!
என்னதான் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் முழுவதும் ஏதாவது ஒரு பட்ஜெட்டிற்குள் அடங்கி விடுகிறது.
ஒரு ரூபாய் கூட அதில் இருந்து சேர்த்து வைக்கவே முடியவில்லை.

மாத கடைசியில் சம்பளம் வாங்கினால் அன்றைய நாளே பாதி சம்பளமும் காலியாகி விடுகிறது. அடுத்த பத்து நாட்களில் மீதி சம்பளமும் நிலைப்பதில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும்.

இந்த பரிகாரம் இத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்கிற எந்த ஒரு விதிமுறையும் இல்லை. உங்களால் முடிந்த ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் இப்படி செய்தால் போதும்.

செம்பு பாத்திரம் ஒன்றை எடுத்து நன்கு கழுவி வெளிப்புறத்தில் மஞ்சள் குழைத்து தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் சீராக குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனுள் கழுத்துப் பகுதி வரை முழுவதுமாக சுத்தமான தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தண்ணீரில் சிறிதளவு மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, பச்சைக் கற்பூரம், ஏலக்காய், துளசி இலைகள் 3 சேர்த்துக் கொள்ளுங்கள். கலசத்தின் கழுத்தில் மல்லிகை பூவால் கட்டிக் கொள்ள வேண்டும். நைவேத்தியத்திற்கு இனிப்பு பண்டங்களை வைக்கலாம். டைமண்ட் கல்கண்டு வைப்பது மேலும் சிறப்பானது.

பின்னர் கலசத்திற்கு அடியில் வெற்றிலை அல்லது சிறிய தாம்பூல தட்டு ஒன்று வைத்து அதில் மஞ்சள், குங்குமம், அட்சதை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மேல் இந்த கலசத்தை வைக்க வேண்டும்.

பின்னர் மகாலட்சுமி தேவிக்கு நெய் விளக்கு தீபம் ஏற்றி வைத்து, கலசத்திற்குள் ஒன்று, இரண்டு, ஐந்து அல்லது பத்து ரூபாய் நாணயங்களை குடும்பத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொன்றாக போட வேண்டும்.

ஒவ்வொரு நாணயத்தை போடும் பொழுதும் அவர்களின் பெயரையும் உச்சரிக்க வேண்டும்.

அனைத்து நாணயங்களையும் கலசத்திற்கு போட்ட பிறகு, தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது மூன்று முறை கீழ்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மஹாலக்ஷ்மி மந்திரம் – ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மியை நமஹ!

வருடம் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தாலே போதும் அப்படி ஒரு பணபுழக்கம் உங்களுக்கு ஏற்படுவதை நீங்களே உணரலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 10.02.2022 Today Rasi Palan 10-02-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleசனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்கார்கள் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள்.