ஈழத்து மருமகள் ரம்பாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது!

0
300

ஈழத்து மருமகளான ரம்பா பல இன்னல்களுக்கு பின்பு தற்போது மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

பிரபல நடிகை ரம்பாவுக்கும், யாழ்பாணத்தை பூர்விகமாக கொண்ட கனேடிய தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில், ரம்பாவின் மூன்றாவது வளைகாப்பு நிகழ்ச்சி கனடாவில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாண்யா, சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிகழ்வில் பல்வேறு திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த இரண்டும் பெண் குழந்தைகள் என்பதால் கணவன், மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றனர். அதன்பின்பு நீதிமன்றத்தில் தனது கணவருடன் வாழ விரும்புவதாக கூறி கணவருடன் மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு திரும்பினார்.

இந்நிலையில் தற்போது மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்றினை டொரண்டோ மவுண்ட் சினாய் மருத்துவமனையில் கடந்த 23ம் திகதி பெற்றெடுத்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: