ஈரல் அழற்சி நோய் உடையவர்கள் மது அருந்தினால் என்ன நடக்கும்!

0
323

ஆல்கஹால் பாவனையானது பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதே மருத்துவ துறையின் கருத்தாகும்.

எனினும் அளவுடன் அருந்தினால் அதுவும் அமிர்தமாகும் என சில ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இப்படியிருக்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் ஈரல் அழற்சி நோயை உடையவர்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது C வகை ஈரல் அழற்சி (Hepatitis C) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துதல் அவர்களை மரணத்தின் விளிம்புக்கு விரைவாக அழைத்துச் செல்லும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றிற்கு மூன்று தடவைகளுக்கு மேல் மது அருந்துபவர்களுக்கு பாதிப்பு அதிகம் எனவும் குறித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ் ஆய்வுக் குழுவிற்கு தலைமை வகித்த Amber L. Taylor என்பவர் கருத்து தெரிவிக்கையில் “2010ம் ஆண்டில் ஆல்கஹாலுடன் தொடர்புடைய ஈரல் நோயானது கொடிய நோய்கள் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: