இவர்கள் தான் மாணவிகளை அழைத்து வர சொன்னார்கள்: நிர்மலா தேவியின் வாக்குமூலம்!

0
401

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை பல மாணவிகளை உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கல்லூரி மாணவிகளை உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும் படி விருதுநகரைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி பேசியது தொடர்பான ஆடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

அதன் பின் அவரை கைது செய்த பொலிசார், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 12-நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கும் படி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நிர்மலா தேவி பொலிசாரிடம் அளித்த வாக்கு மூலம் தற்போது வெளியாகியுள்ளது.அதில், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் இளங்கலை முடித்தேன்.

எம்.எஸ்.சி அருப்புக்கோட்டையில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியிலும், எம்.பில் அஞ்சல் மூலமும் படித்தேன். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்டி முடித்தேன்.

அதன் பின் கடந்த 1995-ஆம் ஆண்டு இரயில்வேயில் பணியாற்றிய சரவணபாண்டியுடன் என்பவருடம் திருமணம் நடைபெற்றது. சென்னையில் தொடர்ந்து வசித்து வந்தேன்.

கணவர் வெளிநாடு சென்ற பிறகு அருப்புக்கோட்டை இருக்கும் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தேன். கல்லூரி பணி நிமித்தம் காரணமாக பல்கலைகழகத்திற்கு வந்தபோது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக உள்ள கருப்பசாமி போன்ற பலருடன் பழக்கம் ஏற்பட்டது.

பல ஆண்டுகளுடன் பேசியதால் கணவருக்கும் எனக்கு அடிக்கடி சண்டை வந்தது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பி.எச்டி முடித்துள்ளதால் காமராஜர் பல்கலைக்கழக பி.எச்டி மாணவர்களுக்கு கைடாக ஆக்குவதற்கு, உதவி செய்கிறோம் என அந்த இருவரும் கூறினர்.

பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பணியாற்றியதால் அங்கு சிலரது நட்பும், அவர்களைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சிலரின் நட்பு கிடைத்தது.

அவர்கள் தான் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தினால் பல காரியங்களை சாதிக்கலாம் என்று கூறினர். அதன் பின்னரே நான் இப்படி மாணவிகளிடம் பேச ஆரம்பித்தேன்.

கல்லூரி நிர்வாக குழுவில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே வாட்ஸ் அப் ஆடியோவை ரிலீஸ் செய்து விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே பேராசிரியை நிர்மலாதேவி இதுபோன்று மாணவிகளை தூண்டி இழிவான செயல்களை செய்து வந்துள்ளார் எனவும் பல மாணவிகளை உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்கியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நிர்மலா தேவியின் வாக்குமூலம், விசாரணை அறிக்கை, கல்லூரி நிர்வாகத்தின் புகார், மாணவிகளின் வாக்குமூலம், நிர்மலாதேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கடிதம் என வழக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற சி.பி.சி.ஐ.டி பொலிசார நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி பொலிஸ் உயரதிகாரி கூறுகையில்,
அந்த ஆவணங்கள் அனைத்தும் இன்னும் சில தினங்களுக்குள் தங்கள் கைக்கு வந்துவிடும். அதன் பின்னரே நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அவரிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பு அவர் தொடர்பான ஆவணங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளோம். எங்கள் அணியில் உள்ள அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தவுள்ளார்கள்.

அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரிப்பார்கள். நிர்மலா தேவியைத் தவிர இன்னும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் அவர்கள் எல்லாம் யார் என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளோம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலா தேவிக்கு பக்கபலமாக இருந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டும் வருகிறது.

நிர்மலா ஒரே கல்லூரியில் படித்து, அதே கல்லூரியில் வேலையும் பார்த்துள்ளார். அவருக்கு கல்லூரியில் நட்பு வட்டாரம் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்கள்மீதும் மட்டுமே எங்களது சந்தேகப் பார்வை இருக்கிறது.

இந்த வழக்கில், நிர்மலா தேவியின் ஆடியோ எங்களுக்கு முக்கிய ஆதாரம். அந்த ஆடியோவை சைபர் கிரைம் பொலிசார் ஆராய்ந்துவருகின்றனர்.

அவர்கள் கொடுக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: