இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம்!

0
228

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப்புலிகளின் இலச்சினை ஊடாக முகநூலில் புதுவருட வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படும் இளைஞர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லக்மாலி ஜயதுங்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த இரண்டு இளைஞர்களும் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வுக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இருவர் தொடர்பிலும் மேலதிக நடவடிக்கைகள் சட்ட மா அதிபரின் ஆலோசனையின் கீழ் இடம்பெறும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: