இளைஞனின் மரணத்தில் உயிர் தப்பிய ஆறு பேர்! இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!

0
268

இலங்கையில் உயிரிழந்த இளைஞனின் உடற்பாகங்களை கொண்டு, ஆறு பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

கடந்த 2ம் திகதி புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த இளைஞன் இன்னுமொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டது.

வீதியின் ஊடாக பயணித்து கொண்டிருந்த மாடு ஒன்றின் மீது மோதியமையினால் தூக்கி வீசப்படட்ட நிலையில் குறித்த இளைஞன் காயமடைந்துள்ளார்.. எம்.பி.சுமித் கிரிஷாந்த என்பவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்தவராகும்.

குறித்த இளைஞன் ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருந்த போதிலும், தான் ஆபத்தான நிலையில் தான் இல்லை என கூறி சிகிச்சை பெற்றுக் கொண்டு இளைஞன் வீட்டிற்கு சென்றுள்ளார். அடுத்த நாள் அவர் ஆபத்தான நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 3 நாட்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார். எனினும் கடந்த 6ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் உடற்பாகங்களை தானம் வழங்குமாறு இளைஞனின் பெற்றோரிடம் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய கண்கள், கல்லீரல், சிறுநீரகம், முழங்கால், பாத தசைகள், தசைகள் மற்றும் பல பாகங்களை பெற்றோரின் விருப்பத்திற்கமைய வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளனர்.

இதுவரையில் இளைஞனிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட உடற்பாகங்களில் 6 பேர் உயிர் வாழ்வதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்.

தச்சு தொழில் செய்து வந்த அவர் திருமணமாகாதவராகும். சகோதரர் சகோதரிகள் 4 பேர் கொண்ட குடும்பத்தின் ஒரு சக்தியாக அவரே காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: