இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!

0
424

குருணாகலில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் நாரம்மல பொலிஸாரினால் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாரம்மல கல்வங்குவ பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாய்த்தகராறு நீண்ட தூரம் சென்றதன் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 24 வயதுடைய நாரம்மல, தம்பகிரிகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வீட்டில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம் பெறவுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: