இளம் பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!

0
397

இந்த உலகம் அதிசயங்களாலும், ஆச்சரியங்களாலும் நிறைந்தது. ஆச்சரியங்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் அதிர்ச்சியுடன் சேர்ந்த ஆச்சரியம் என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படி ஒரு இன்ப’அதிர்ச்சி’ தான் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது.

நியூசிலாந்தை சேர்ந்த ரெபேக்கா ஓல்ட்ஹாம்-க் என்ற பெண்ணுக்கு வயிற்று வலி தாங்க முடியாமல் கர்ப்பப்பையை நீக்க அறுவை சிகிச்சை செய்ய சென்றுள்ளார்.

இதன்போது, 36 வாரங்கள் முழுமையடைந்த 4 கிலோ எடையுடைய ஒரு ஆண்குழந்தை இருந்துள்ளது. இதனை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

தலைமுடி நிபுணராக பணிபுரியும் இருபத்தைந்து வயதான ரெபேக்கா ஓல்ட்ஹாம் தனக்கு ஏற்கனவே ஹேய்லி என்ற மகள் இருப்பதால் மீண்டும் கர்ப்பமாக வேண்டாமென முடிவெடுத்தார்.

இந்நிலையில் வயிற்றுவலி காரணமாக பணியிலிருந்து வீடு திரும்பிய ரெபேக்கா வலி தாங்க முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு மூன்று ஸ்கேன், இரண்டு இரத்த பரிசோதனை மற்றும் ஆறு கர்ப்பகால பரிசோதனைகள் செய்யப்பட்டது.

வயிற்றுவலிக்கான காரணம் புரியாமல் தவித்த மருத்துவர்கள் அவரின் சம்மதத்தோடு ரெபேக்காவின் கர்ப்பபையை அகற்ற முடிவெடுத்தனர்.

அறுவை சிகிச்சை தொடங்கிய சிறிது நேரத்தில் மருத்துவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர், காரணம் ரெபேக்காவின் வயிற்றுவலிக்கு காரணம் அவர் வயிற்றில் இருந்த 9 மாத குழந்தையாகும்.

மருத்துவர்கள் உடனடியாக சிசேரியன் செய்ய முடிவெடுத்து ரெபேக்காவின் மயக்கம் தெளிய காத்திருந்தனர்.

மயக்கம் தெளிந்த ரெபேக்காவிடம் அவர் மீண்டும் தாயாக போகிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியைக் கூறிவிட்டு அறுவை சிகிச்சையை தொடர்ந்தனர்.

தாயாக போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் ரெபேக்கா அந்த செய்தியை அறிந்தார். ” நல்லவேளை சிறிது நேரத்திற்கு முன்னராவது சொன்னார்களே, மயக்கம் தெளிந்தபின் கையில் குழந்தையை கொடுத்து இதுதான் உங்கள் குழந்தை என்று சொல்வதைவிட இது சிறந்தது ” என பின்னாளில் ஒரு பேட்டியில் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: