இளம் பெண்ணின் உயிரை காவு வாங்கிய மீன் பிரியாணி – என்ன மீன் தெரியுமா?

0
609

சென்னையை சேர்ந்த அனாமிகா என்ற மாணவி, ஏர்ணாகுளத்தில் சுற்றுலாக்கு சென்றபோது மீன் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சேர்ந்த பிளஸ்- 1 படிக்கும் மாணவி அனாமிகா. தனது பெற்றோருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து குடிபெயர்ந்து எர்ணாகுளத்திற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று அந்த மாணவி தனது பெற்றோருடன் அங்கு சுற்றுலாக்கு சென்றார். அப்போது அவருக்கு பசி எடுத்துள்ளது.

அதனால் அங்குள்ள ஓட்டலில் செம்மீன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் மாணவிக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதனால் அந்த மாணவியின் பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த மாணவி செம்மீன் பிரியாணி சாப்பிடத்தால் ஏற்பட்ட அலர்ச்சியால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: