நடிகர் ஆர்யா மற்றும் சயீஷா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதனை உறுதி செய்யும் விதமாக ஆர்யா மற்றும் சயீஷாவின் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சயிஷாவின் அம்மா தனது வருங்கால மருமகன் ஆர்யா குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
வாழ்வில் மிக அழகான தருணம். எங்கள் குடும்பத்தில் ஆர்யாவை மருமகனாக அடைய மகிழ்ச்சி அடைகிறோம்.
இறைவனின் கருணைக்கு நன்றி ஆர்யா-சயிஷா இருவருக்கும் எனது அன்பும் வாழ்த்துக்களும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து அவரின் புகைப்படத்தையும் ரசிகர்கள் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சி என்ற பெயரில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி துவங்கியது இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெரும் நபரை ஆர்யாதிருமணம் நிகழ்ச்சி போகிறார் என்று அறிவித்திருந்தனர்.
ஆனால், இறுதி போட்டியில் யாரையும் திருமணம் செய்து கொள்ள வில்லை. இந்நிலையில் ரசிகர்கள் ஆர்யா மீது கடும் அதிர்ப்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.