இளம்பெண் குளிப்பதை அத்துமீறி பார்த்த ஆளுநர் மீது புகார்

0

இளம்பெண் குளிப்பதை அத்துமீறி பார்த்த ஆளுநர் மீது புகார்!

ஆளுநரே இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்த நிலையில் தற்போது தான் பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக பதவியேற்றார். இதை தொடர்ந்து பல பணிகள் மேற்கொண்டார்.

இந்நிலையில் கடலூரில் வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர் முதலான பகுதிகளுக்கு ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். ஆய்வு மேற்கொண்ட பகுதியில் கழிவறை கீற்று மறைப்பில் நுழைந்த ஆளுநர் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருப்பதை கவனிக்காமல் சென்றுள்ளார். அவரை பார்த்த அப்பெண் கூச்சலிட்டுள்ளார்.

இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஊர்மக்கள் அப்பகுதியில் கூடியதால் ஆளுநருக்கு ஆபத்து ஏற்பட்டது. பின் தான் குளிப்பதை அத்துமீறி பார்த்ததாக ஆளுநர் மீது புகாரும் அளித்துள்ளார். சில நேரத்தில் ஆளுநர் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார்.

பெண் கொடுத்த புகார் தொடர்பாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் குழம்பி வருகிறது. ஆளுநர் இனியும் ஆய்வு மேற்கொள்வாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுத்தக் காட்சியால் ஷாக் கொடுத்த பிரபல மதுரை நடிகை
Next articleபுதிய ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடித்த 6 வயது சிறுவன்! கண்டுபிடித்த வார்த்தை என்ன தெரியுமா!