உங்களுடைய இளமையான தோற்றத்தை மேலும் அதிகரிக்க இவற்றை செய்யுங்கள்!

0

உங்களுடைய இளமையான தோற்றத்தை மேலும் அதிகரிக்க இவற்றை செய்யுங்கள்!

மிக எளிது. நீங்கள் என்றும் இளமையான சருமத்தைக் கொண்டிருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது சில டெக்னிக்குகள்தான். எமது உடலிலுள்ள விட்டமின் மற்றும் மினரல், முக்கியமாக அமினோ அமிலங்கள் தனித்தனி சத்துக்களாக பிரிந்து, உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அதற்கு தேவையான சக்தியை வழங்குகின்றன.

பொதுவாக பதினாறு ப்ளஸ்களில் கொலாஜன் உற்பத்தி அதிகமாக காணப்படுவதனால், அவை சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையை கொடுத்து சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கின்றதுடன், தோலிற்கடியில் மென்மையை கொடுத்து சருமத்தை மெததுமெத்;தென்று ஆக்குகிறது. இதனால்தான் இந்த வயதுடையோரின்; சருமம் மிகவும் அழகாகவும் பொலிவாகவும் காணப்படுகின்றது.

தொடர்ந்து வயது அதிகரித்து வரும்போது கொலாஜன் உற்பத்தியின் அளவு குறைவடைவதனால், சருமத்தில் இறுக்கம் அதிகரித்து தோலுக்கடியில் உள்ள குஷன் போன்ற மிருதுவான தன்மை இழக்கப்படுகின்றது. எனவே, நாம் புரோட்டின் மற்றும் நார்சத்துகளை அதிகளவில் கொண்ட உணவுகளை உண்ணும்போது அவை கொலாஜன் உற்பத்தியை அதிகமாக்கி, சருமமும் வறட்சியடையாமல் பாதுகாக்கும்.

சிலரை பார்க்கும்போது அவர்களின் சரியான வயதினை எம்மால் நிச்சயம் கண்டு பிடிக்க முடியாது. அத்தகைய ஒரு நிலைமை என்பது வெறுமனே மேக்கப் வர்ண பூச்சுகளைப் பூசுவதனால் மட்டுமே சாத்தியப்பட்டிருக் முடியாது. பின்னர் அதற்க பின்னால் உள்ள இரகசியம் தான் என்ன?

நீங்கள் நினைப்பது முற்றிலும் சரியே. அது உணவுதான். இங்கு எந்த விதமான உணவுகளை நீங்கள் சாப்பிடுகின்றீர்கள் என்பது முக்கியமான விடயமாக உள்ளது. நீங்களும் மற்றவர் உங்களைப் பார்த்து பொறாமைப்படும் படி என்றும் பதினாறாகவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவராக இருந்தால் இதனை தொடர்ந்து வாசியுங்கள். சருமம் என்றும் இளமையான தோற்றத்திலிஇருக்க காரணம் தான் என்ன?

இப்போது தெரிந்து கொண்டிர்களா சிலர் எப்போதும் இளமையாகவே இருப்பதற்கான காரணத்தை. நிரந்தரமான அழகு என்பதனை வெறுமனே அகத்தினால் மட்டும் பெற்றிட முடியாது. மாறாக அதற்கு ஆரோக்கியமான உணவும் அவசியமாக உள்ளது.

அது சரி என்னென்ன உணவுகளை உண்ணலாம்?

காலே கீரை :

மிக மிக அற்புதமான பலன்களைக் கொண்டுள்ள காலே கீரையினை வாரம் மூன்று தடவையாவது உணவிலோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளும் போது சருமத்த்தின் திசுக்களில் ஏற்படும் பிரச்சனைகளை சீர் செய்து சரிபடுத்தி விடுவதுடன், ஒரு புஷ்டியான தோற்றத்தை கொடுத்து இளமையாக தோன்ற வைக்கும். இவ்வாறாக உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே நம்ப மாட்டீர்கள். அவ்வளவு அற்புதத்தை இந்த கீரை தரும்.

பெர்ரி பழங்கள் :

அதிகளவான ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகளையும், நார்ச்சத்துகளையும் கொண்டுள்ள பெர்ரி பழங்கனை தினமும் சாப்பிட்டு வரும் போது நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் தூய்மையடையும்;. கண்ட கண்ட ஜங்க் உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து பெர்ரி பழங்கள் சாப்பிட்டுப் பாருங்கள் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

நீர்:

எங்கும் எப்போது எளிதில் கிடைக்கக் கூடிய தண்ணீரை தவறாமல் குடிக்கும் பழக்கத்தை எற்படுத்திக் கொள்ளுங்கள். எம்மில் பெரும்பாலானோர் தாகம் வந்தால் தவிர நீரினை கண்களால் கூட பார்க்காதவர்களாக சில வேளைகளில்; நாம் நீர் குடிப்பதையே மறந்து விடுகிறோம். இது மிகவும் தவறான ஒரு விடயமாகும்.

தாகம் ஏற்படுதல் என்பது உங்கள் உடலில் போதிய அளவு நீர்சத்து; இல்லை என்பதனை வெளிப்படுத்துகின்றதுஃ எனவே, தாகம் வரும் வரை காத்திருந்து நச்சுக்க்களும் வேண்டாத கழிவுகளும் உடலில் சேருவதனை தவிர்த்து அவற்றை வெளியேற்றுவதற்கு நீங்கள் நீர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.

நட்ஸ் :

அற்புதமான ஸ்நாக்ஸ் உணவாகிய நட்ஸ் வகைகளில் முந்தரி மற்றும் பூசணிக்காய் விதைகளில் தேவையான மினரல்கள் உள்ளதுடன், செலினியமும் விட்டமின் ஈ உடன் சேர்ந்து கேன்ஸர் செல்களை விரட்டியடிக்கும் சக்தி கொண்ட மிக அற்புதமான ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது.

இவை அனைத்தும் பொதுவாக எல்லா வகையான நட்ஸ்களிலும் காணப்படுகின்றன. மாலையில் கொறிக்க நட்ஸ்களை சாப்பிட்டுப் பாருங்கள் சிறிது நாட்களிலேயே உங்கள் ஒட்டிய கன்னங்கள் கொண்ட வறட்சியான சருமம் நீங்கி; சருமத்தில் மிருதுதன்மை அதிகரிப்பதை நீங்களே காண்பீர்கள்.

அவகேடோ :

அதிக நார்சத்தும் ஆன்டி ஆக்ஸிடென்டினையும் கொண்டுள்ள அவகேடோ கொழுப்பினைக் கட்டுபடுத்தும். இதில், உள்ள அதிகளவான விட்டமின் ஈ கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதுடன், இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும் போது இளமையான தோற்றத்தை பெறுவது உறுதி.

சிவப்பு திராட்சை :

சிவப்பு திராட்சையில் இளமையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்ட அதிகளவான ஆன்டி ஆக்சிடென்ட் காணப்படுகின்றது. மேலும், விட்டமின் சி யில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டை விட இந்த சிவப்பு திராட்சையில் 50 மடங்கு அதிகமும், விட்டமின் ஈ யில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமும் உள்ளது. தினமும் என்று இல்லாமல் வாரம் ஒரு தடவையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் இங்கு கட்டாயப்படுத்தப்படுகின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article‘மெர்சல்’ படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன தெரியுமா?
Next articleஅலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டுமாம். ஏன் தெரியுமா?