இலங்கை யுவதி ஒருவர் ஐரோப்பிய நாடொன்றில் த‌ற்கொலை!

0
288

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்ற யுவதி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இத்தாலியில் பணி செய்து வந்த இளம் யுவதி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த யுவதி இலங்கை வந்திருந்தார். மீண்டும் இத்தாலிக்கு சென்றிருந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார்.

4 வருடங்களாக இளைஞர் ஒருவருடன் காணப்பட்ட காதல் தொடர்புக்கு, பெற்றோர் எதிர்ப்பு வெளியிட்டமையினால் இவ்வாறு விஷமருந்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: