இலங்கை யாழ்ப்பாணத்தில் பழமையான கார்களின் அணிவகுப்பு இன்று(3.6.20) காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பழமைவாய்ந்த பதினெட்டு வகை கார்கள், மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளும் நேற்று முன்தினம் தலைநகர் கொழும்பில் இருந்து பேரணியாக புறப்பட்டு, நேற்று மாலை யாழ். நகரை வந்தடைந்து இன்று (3) காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு சென்று அங்கிருந்து நல்லூர் வீதி வழியாக மீண்டும் கொழும்பு நோக்கிச் சென்றன. இந்த அணிவகுப்பினை மக்கள் கண்டுகளித்தனர்.
வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் றோசான் பெனாண்டோ பேரணியாக வந்த வாகனங்களினை பார்வையிட்டார்.
BY: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: