இலங்கை மக்களின் நன்மைக்காக உயிர் பலியெடுக்க தயாராகும் இளைஞர்கள்!

0
669

இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், அதனை நிறைவேற்றும் பதவிக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர்.

மஹவிலச்சிய பகுதியில் உள்ள பிள்ளைகள் ஹேரோயின் மற்றும் போதைப்பொருள்களுக்கு பலியாகுவதனை தடுப்பதற்காக 5 இளைஞர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளனர்.

தங்கள் தன்னார்வமாக இந்த பதவியை ஏற்றுக் கொள்வதாக மஹவிலச்சிய கிராமத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.

அனுராதபுர மாவட்டத்தின் வறுமையான கிராமத்தில் வசிக்கும் ருவன் ஹேமன்த, ஹேரத் பண்டா, சனி ரத்ன பண்டார, நிஹால் ரூப்பசிங்க மற்றும் சமிந்த பிரேமதிலக்க என்ற 30 – 40 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு இந்த பதவியை ஏற்றுகொள்ள ஆயத்தமாகின்றனர்.

நாட்டு மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்காக தாம் தன்னார்வமாக இந்த பதவியை ஏற்றுக்கொள்வதாக அந்த இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவியை ஏற்றுகொள்ள யாரும் இல்லை என்றால் நாம் வருகின்றோம். நாம் பிரபலமடைய இந்த பதவியை கேட்கவில்லை. பயிற்சி பெற்று இதனை செய்ய நாம் தயார் என அவர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: