இலங்கை பொலிஸாரின் திடீர் மாற்றம்!

0
496

சீன மொழியான மெண்டரின் மொழியைக் கற்பதற்காக இலங்கை பொலிஸ் குழு ஒன்று சீனா சென்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை சீனா சென்றுள்ள குறித்த பொலிஸ் குழு, இம்மாத இறுதிப் பகுதியில் நாடு திரும்பவுள்ளது.

உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி சீன ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் சீன சுற்றுலாப்பயணிகளை கையாளும் நோக்கிலும், அவர்களுக்கு உதவியளிக்கும் நோக்கிலும், மெண்டரின் மொழியின் அடிப்படை அறிவைப் பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் குழு சீனா சென்றுள்ளது.

இதற்காக நாடு முழுவதிலுமுள்ள சில பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பணிகளில் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 190,000க்கும் அதிகமான சீன சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: