இலங்கை நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

0
178

மூதூரில் இரண்டு பிள்ளைகளுக்கு 88 ஆயிரம் ரூபாய் பணத்தினை தாபரிப்பாக செலுத்தாத நபருக்கு 11 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று குறித்த உத்தரரை வழங்கியுள்ளார்.

மூதூர்,கூனித்தீவு, பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இரண்டு பிள்ளைகளுக்கு மாதாந்தம் 8800 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் 11 மாதங்களாக 88 ஆயிரம் ரூபாய்யினை தாபரிப்பாக செலுத்தாது இருந்துள்ளார்.

இந்நிலையிலே மனைவி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் குறித்த நபரை கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: