இலங்கை தமிழர்களுடன் காதலில் விழுந்த முக்கிய பிரபலங்கள்! காதலே! காதலே!

0

இந்த உலகில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் உணர்வுபூர்வமான ஒன்றுதான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர்.

அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் காதல்.

அப்படி, கடல் கடந்து இலங்கை தமிழருடன் காதல் வயப்பட்ட சில இந்திய பிரபலங்களின் பட்டியல் இதோ

ரம்பா – இந்திரன் பத்மநாதன்
இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. கனடாவில் வசித்து வந்த மேஜிக் உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரன் பத்மநாதன்.

இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரம்பா நியமிக்கப்பட்டார். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும், மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

விஜய் – சங்கீதா
லண்டனை சேர்ந்த சங்கீதா, பூவே உனக்காக படம் பார்த்து அவரது தீவிர ரசிகையானார். இதனால் விஜய்யை பார்ப்பதற்காக லண்டனில் இருந்து சென்னைக்கு வந்திருந்துள்ளார்.

ரசிகையாக அறிமுகமாகி, நண்பர்களாகி பின்னர் காதலர்களாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து விஜய்யின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

ஆரி – நதியா
தமிழ் திரைப்பட நடிகர் ஆரி லண்டன் வாழ் ஈழத்து தமிழ்பெண்ணான நதியாவை காதலித்து 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நதியா படித்துக்கொண்டிருக்கையில் ஆரி நடித்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தினை பார்த்து, அவரது நடிப்பால் கவரப்பட்டுள்ளார்.

ஆரியின் மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தினை பார்த்துக்கொண்டிருந்த நதியா, தனது அம்மாவிடம் நான் இவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என விளையாட்டாக கூறியுள்ளார்.

ஆனால், இது உண்மையானது. இருவரும் நண்பர்களாகி காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

சின்னத்திரை நடிகை சரண்யா
ஊடகவியலாளர், சீரியல், சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் நடிகை சரண்யா இலங்கை தமிழரை காதலித்து மணமுடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின் லண்டனில் செட்டில் ஆக முடிவு செய்த சரண்யா, சீரியலில் கலக்கி வருகிறார்.

இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்தவர் சரண்யா. திருமணத்திற்கு பிறகு லண்டனில் செட்டிலாகப் போவதாக தெரிவித்தார். ஆனால் சென்னையில் தங்கி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுகாதார அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Next articleதிருமணத்தில் தனுஷ் மகன் காட்டிய ஸ்டைல்! தாத்தாவுக்கே போட்டியா!