இலங்கையை விட்டு தப்பியோடிய ஆபத்தான நபர்கள்!

0

நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து பாதாள உலக குழுவினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து கடந்த காலங்களில் நாட்டில் பாரிய குற்ற செயல்களை மேற்கொண்ட பாதாள உலக குழு தலைவர்கள் இலங்கையை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் பாதாள உலக குழு உறுப்பினர்கள் பலர் இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸ் புலனாய்வு பிரிவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தப்பிச் சென்றவர்களில் பலர் டுபாய் நாட்டை நோக்கி சென்றுள்ளதாக புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமஹிந்த அரசுக்கு எச்சரிக்கை! இன்று ஸ்தம்பிதம் அடையவுள்ள கொழும்பு நகரம்!
Next articleஆட்டங்காணும் ஹோட்டல்கள்! மஹிந்தவின் வருகையால்!