இலங்கையில் நேற்று நடந்த பேரதிர்ச்சி! வானத்திலிருந்து திடீரென வீதிக்கு இறங்கிய பயங்கரத் தீப்பிழம்பு!

0
591

வீதியால் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த நபர் பயங்கர மின்னல் தாகத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக பொலநறுவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலநறுவையிலிருந்து A11 நெடுஞ்சாலையூடாக அனுராதபுரம் நோக்கி உந்துருளியில் சென்றுகொண்டிருந்தபோதே கிரித்தலை வாவிக்கு அண்மையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை மூன்று மணியளவில் குறித்த பகுதியில் இலேசான இடி மின்னலுடன் மழை தூறிக்கொண்டிருந்த நிலையில் அவ்வழியால் வாகனங்கள் சென்றுகொண்டிருந்துள்ளன.

இந்த நிலையில் குறித்த இளைஞர் சென்றுகொண்டிருந்தபோது திடீரென வானத்திலிருந்து பாரிய தீப்பிழம்பு போன்ற ஒன்று பளிச்சென்று இறங்கியுள்ளது. கிட்டத்தட்ட இளைஞரிலிருந்து 100மீட்டர் தூரத்திலேயே இது நிகழ்ந்துள்ளது.

இதனையடுத்து பதறிப்போன இளைஞர் உந்துருளியை திடீரென நிறுத்தியதனால் வீதியில் சரிந்து விழுந்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த பாரிய அனர்த்தத்திலிருந்து தப்பிய அவருக்கு காலில் சிராய்ப்புக் காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் உயிர் தப்பியமை தெய்வாதீனமாக நிகழ்ந்த ஒரு விடயம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் பல பாகங்களிலும் மழை பெய்துவரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பருவ மழை பெய்யத்தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தகதாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: