இலங்கையில் நடந்த கோரச் சம்பவம் – பெண்கள் உட்பட ஐவர் பலி!

0
498

கண்டி பன்வில பிரதேசத்தில் தலுக் ஓயா ஆற்றில் குளிக்க சென்ற 5 பேர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இன்று நடந்த இந்த சம்பவத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்ததுடன் மற்றுமொரு ஆண் காணாமல் போயுள்ளார்.

கண்டி வூலு கங்கையின் கிளை ஆறான தலுக் ஓயா ஆற்றில் குளித்த போது ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் கொல்லப்பட்டவர்கள் கொழும்பு கொத்தொட்டுவ பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன நபரை தேடும் பணிகளை பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கைக்கு கொண்டு வரப்படும் ஆபத்து! மக்களுக்கு எச்சரிக்கை!
Next articleகண்ணீருடன் இருக்கும் அபர்ணதிக்காக களத்தில் குதித்த இளைஞர்கள்! வைரலாகும் காட்சி!