இலங்கையில் துண்டிக்கப்பட்ட நிலையில் தாய்லாந்து பெண்ணின் தலை!

0

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம – பொல்கொட பாலத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் காணப்பட்ட தலையும் எம்பிலிபிட்டிய செவனகல – கிரிஇப்பன் வாவியில் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதியும் ஒரே பெண்ணினுடையதா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று முற்பகல் பண்டாரகம – பொல்கொட பாலத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் கண்டெடுக்கப்பட்ட தலை வெளிநாட்டு பெண்ணொருவருடையது என சந்தேகப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு குறித்த பெண் கொலை செய்யப்பட்டு, அவரின் தலை துண்டிக்கப்பட்டு பண்டாரகம- பொல்கொட பாலத்திற்கு அருகில் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் துண்டிக்கப்பட்ட தலை சீன அல்லது தாய்லாந்து நாட்டின் பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று பிற்பகல் எம்பிலிப்பிட்டிய – செவனகல – கிரிபன்பவெவவில் தலை மற்றும் கால் இல்லாத உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரணில் எச்சரிக்கை! இரத்தக்களறியை தடுக்கும் நேரம் கடந்துக் கொண்டிருக்கிறது!
Next articleதரைமட்டமானது சர்காரின் வானுயர கட்-அவுட்! யார் காரணம் தெரியுமா?