இலங்கையில் சிறுமியை பா(லிய)ல் து(ஷ்)பிரயோகம் செய்த 10 இளைஞர்கள்..!

0
837

இலங்கை மொனராகலை செவனகல பகுதியில் 15 வயது சிறுமிஒருவரை 10 இளைஞர்கள் பலமுறை கூட்டு பா(லிய)ல் வன்(புணர்)வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களை 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க எல்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் 17 – 20 வயதுடையவர்கள்.

இவர்களில் ஒருவர் தன்னை சிறுமியின் காதலன் எனவும் மற்றவர்கள் காதலனுடைய நண்பர்கள் எனவும் கூறுகின்றனர்.

சிறுமியை பாழடைந்த வீடு மற்றும் விடுதிக்கும் கொண்டு செல்லப்பட்டு இந்த கொ(டூ)ர செயல் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சிறுமி முச்சக்கரவண்டியில் செல்வதனை கண்ட உறவினர் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயிடம் தகவல் வழங்கியுள்தையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாயாரரின் முறைப்பாட்டிற்கமைய குறித்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: