இலங்கையில் கொரோனா வைரஸால் 2வது நபர் உயிரிழந்துள்ளார்! அவர் சென்ற இடம் குறித்து வெளியாகிய தகவல்!

0

இலங்கையில் கொரோனா வைரஸால் 2வது நபர் உயிரிழந்துள்ளார்! அவர் சென்ற இடம் குறித்து வெளியாகிய தகவல்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 64 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார் என‌ சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 122 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த நபரின் குடும்பத்தில் 11 உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 8ம் திகதி சுப நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசீனாவில் மருத்துவரை கொ(ன்று) சாப்பிட்ட தாதி! வெளியான திடுக்கிடும் சம்பவம்!
Next articleகொரோனாவால் முடங்கியது திரையுலகம்!