இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது!
பேருவளையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேருக்கு கொரோனா நோய் தொற்று இனங்காணப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட இவர்கள் புனாணி தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக “களுத்துறை சுகாதாரப் பிரிவு” தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்த்க்கது. மெலும் இதேவேளை கொரோன வைரஸ் தொற்றாளி ஒருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆகும்.