இலங்கையில் எரிபொருள் விலைகள் இரு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம்

0
441

புதிய விலைச் சூத்திரத்திற்கமைவாக எரிபொருள் விலை இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை மாற்றமடையலாம் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விலை மாற்றமானது உலக சந்தை விலைக்கமைய அதிகரிக்கும் அல்லது குறையும்.புதிய விலைச் சூத்திரத்திற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த புதிய விலைச் சூத்திரம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் யுவதிக்கு நடுரோட்டில் சரமாரி உதைத்த காரணம்?
Next articleஇன்று! எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கும்