இலங்கையில் இராணுவத்திற்கெதிரான பொதுமக்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்கள்!

0

பொத்துவில் – பாணமை பிரதேசத்து மக்களால் இன்று 2019/02/11 ம் திகதி வீதி மறியல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ராகம்வெளி மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் பொத்துவில் பிரதான வீதியில் பதாகைகள் ஏந்தி எதிர்ப்பினை வெளிக்காக்காட்டினர். இதன்போது ராகம்வெளி மற்றும் எனைய காணிகள் நான்கு வ௫டங்களுக்கு மேலாகியும் உரிய மக்களுக்கு சட்டபூர்வமாக வழங்கப்படவில்லை என குறித்த ஆர்ப்பாட்ட காரர்கள் அரசுக்கு ஏதிராக கோசங்களை எழுப்பினர் .

இக் காணிகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்துடன் ராகம்வெளி, பானமை மற்றும் எனைய இடங்களில் இ௫ந்து வ௫கைதந்த பொது மக்கள் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவ௫ம் இணைந்து பொத்துவில் பிரதான வீதியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அமைச்சரவை தீர்மானங்கள் எட்டப்பட்டும் உத்தியோகபூர்வமாக மக்கள் வாழ்ந்த இடங்கள் அவர்களுக்கு மீள கையழிக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது ராகம்வெளி, சாஸ்திரவெளி,பாணமை, கண்ணகிபுரம்,அஷ்ரப்நகர்,பொன்னாகம் வெளி,கனகர் கிராமம் போன்ற இடங்களில் அரச படையினர், அரசியல்வாதிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்டுத்தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தமிழ் ,சிங்களம்,முஸ்லிம் மக்களுடன் வெளிநாட்டவர்கள் சிலரும் ஆர்ப்பாட்ட காரர்களுடன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசூப்பர்ஸ்டாராக இல்லாமல் சவுந்தர்யாவின் தந்தையாக இருந்த ரஜினி! கொடுத்த சீர்வரிசை எவ்வளவு தெரியுமா!
Next articleநாம் தமிழர் கட்சியினர் என்னை வெட்டினர்! இரத்த வெள்ளத்தில் உயிர் தப்பியதாக ரஜினி ரசிகர் கண்ணீர்!