இலங்கையில் இனி சாரதி அனுமதி பத்திரம் பெறுவோருக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

0
923

சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பரீட்சையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதுவரை காலமும் நடைபெற்று வந்த எழுத்து மூல பரீட்சை இனி டிஜிட்டல் முறையில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து திணைக்களம் இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் இருந்து புதிய முறையின் கீழ் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக மோட்டார் வாகன திணைக்களத்தின் அலுவலகத்தில் புதிய நடைமுறை செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 150 பேர் பரீட்சை எழுதுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை முறைக்கேடுகளை தவிர்ப்பதற்காக, விரைவாக பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்காக இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: